உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

`கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி; எம்எல்ஏ மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?' – எடப்பாடி காட்டம்

தினப்புயல் • • 3 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
`கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி; எம்எல்ஏ மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?' – எடப்பாடி காட்டம்
வாசிப்பு
Facebook Telegram

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " தமிழக முதலமைச்சர் இதுவரை பத்திரிகை மற்றும் ஊடகங்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. இதனால், இந்த அரசில் என்ன நடக்கிறது? அரசு செயல்படுகிறதா, இல்லையா? என்பதே மக்களுக்குத் தெரியாத நிலை உள்ளது.

சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்களில் சிறப்பான ஆட்சி வழங்கப்படும் என கூறினார். ஆனால், தமிழக மக்களுக்கு ஒரு துயரமான ஆட்சியைத்தான் இந்த அரசு வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

.

குறிப்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தது முதல் கொலை, பாலியல் சீண்டல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செஞ்சியில் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணாமல் போன சிறுமியை இதுவரை காவல்துறையினர் கண்டுபிடிக்காதது வேதனையளிக்கிறது. பெண்கள், சிறுமிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்எல்ஏ மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →