உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "நேற்று முன்தினம் SP-ஐ சந்தித்து ஆட்சியர் புகார் அளித்தார்" – DGP தகவல்

தினப்புயல் • • 20 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "நேற்று முன்தினம் SP-ஐ சந்தித்து ஆட்சியர் புகார் அளித்தார்" – DGP தகவல்
வாசிப்பு
Facebook Telegram

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அந்த மாவட்ட கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விளக்கமளித்துள்ளார்…

“காவல்துறைக்கு எங்கிருந்து புகார்கள் வந்தாலும், அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குப் பதிவு செய்வோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பொறுத்தவரை, நேற்று முன்தினம் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து அதிகாரி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். முன்தினமே காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

."உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை…" – கனிமொழி.

இது தற்போது விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஒரு ஐ.ஜி.யின் மேற்பார்வையில் நாங்கள் இந்த விசாரணையை நடத்தி வருகிறோம். இதில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அந்த விசாரணைக் குழு எடுக்கும்.

விசாரணையைப் பொறுத்தவரை, அது மிகவும் நேர்மையாக நடத்தப்படும். நடைமுறைகளின்படியும், சட்டப்படியும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நாங்கள் கண்டிப்பாக எடுப்போம்.”

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →