நாட்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டிய லோக்பால் அமைப்பு, ஆடம்பரக் காரை விரும்பிக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் பற்றிக் கவலைப்படாத, தங்கள் ஆடம்பரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம், அரசாங்கம் லோக்பாலை செயல்படவிடாமல் செய்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸின் இளைஞர் பிரிவு, “ஒரு காலத்தில் பொறுப்புக்கூறலின் அடையாளமாக இருந்த லோக்பால் அமைப்பு இடிந்து விழுகிறது… முக்கிய நியமனங்கள் இல்லாத ஒரு அமைப்புக்கு அரசாங்கம் ஏன் சொகுசு வெளிநாட்டு கார்களை வாங்குகிறது?” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.