அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றவரிடம்,

‘கரூர் தவெக கூட்ட உயிரிழப்பு சம்பவத்தின்போது அழுததை எதிர்க்கட்சியினர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும், இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் அது மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார், முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக்க மறந்துவிட்டான்” என்றார்.