விட்ராதடா தம்பி.. மாருதி சுசூகி போடும் மெகா திட்டம்.. கார் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!


இந்திய கார் விற்பனை சந்தையில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசூகி மோட்டார் எப்போதும் இல்லாமல் சமீப காலமாக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களான மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ்-ன் எழுச்சி ஹுண்டாய், கியா, ஆகியவைற்றின் பட்ஜெட் மாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால் மாருதி சுசூகி -யின் சந்தை பங்கீடு குறைந்துள்ளது.

இந்த சந்தை பங்கீட்டை மீண்டும் உயர்த்தும் நோக்குடன், இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் எஸ்யூவி டிரெண்டுக்கு ஏற்ப அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் எட்டு புதிய SUV மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விட்ராதடா தம்பி.. மாருதி சுசூகி போடும் மெகா திட்டம்.. கார் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!

சுசூகி நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி , டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்தியாவில் 40 ஆண்டுகளாக இயங்கும் சுசூகி , தற்போது மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், வரலாற்று சாதனை அளவான 50 சதவீத சந்தைப் பங்கை மீண்டும் அடைய இந்த புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.

மாருதி சுசூகி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.05 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 16,140 ரூபாய் அளவில் உள்ளது. இதேவேளையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வரும் இந்நிறுவன பங்குகள் 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 44 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி இந்தியாவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. குறிப்பாக மாருதி சுசூகி-யின் சிறிய கார்கள் மற்றும் பயணியர் வாகனங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது ஹூண்டாய், டாடா, மஹிந்திரா போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் SUV பிரிவில் வலுவான போட்டியை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக சுசூகியின் சந்தைப் பங்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், SUVகளின் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி சுசூகி தனது இழந்த நிலையை மீட்டெடுக்க முயல்கிறது. இதேவேளையில் பைக் வாங்குவோரை கார் வாங்க வைக்கும் முயற்சியாக மீண்டும் சிறிய ரக கார்களின் விற்பனையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறது மாருதி சுசூகி.

மாருதி சுசூகி அறிமுகம் செய்யும் 8 புதிய மாடல் எஸ்யூவி கார்கள் பெட்ரோல், டீசல், ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வகைகளில் வரலாம். சுசூகி இந்தியாவில் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *