latest

என் வழி தனி வழி!! அமேசான், பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி Meesho சாதித்தது எப்படி?


பண்டிகை காலம் என்றாலும் சரி வீட்டிற்கு ஒரு பொருள் தேவை என்றாலும் சரி பெரும்பாலும் நாம் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்கி வருவோம். ஆனால் இ காமர்ஸ் தளங்கள் நாம் பொருட்களை வாங்கும் முறையை மாற்றி அமைத்து விட்டன.

வீட்டில் உள்ள அனைவருக்கும் துணிமணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ,செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக் கொள்ள முடிகிறது . அந்த அளவிற்கு இந்தியாவில் மக்கள் ஷாப்பிங் செய்யும் நடைமுறையை இந்த இ காமர்ஸ் தலங்கள் பெரிய அளவில் மாற்றி வைத்திருக்கின்றன . அமேசானும், பிளிப்கார்டும் இ காமர்ஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோடிக்கணக்கில் முதலீடு செய்து கிடங்குகள் , லாஜிஸ்டிக் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்கின .

என் வழி தனி வழி!! அமேசான், பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி Meesho சாதித்தது எப்படி?

ஆனால் இவை எதுவுமே இல்லாமல் சத்தமே இல்லாமல் இ காமர்ஸ் தளத்தில் நுழைந்து அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி மிகப் பெரிய சாதனையாளராக உருவாகி இருக்கிறது மீஷோ. அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்த நிலையில் மீஷோ குறைந்த விலைக்கு பொருட்களை தேடக்கூடிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் கிராமங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை குறி வைத்தது.

அதாவது குறைந்த விலைக்கு பொருட்கள் வேண்டும் தரமானதாகவும் வேண்டும் என எண்ணக்கூடிய இந்தியாவின் பாதிக்கும் அதிகமான மக்கள் தொகை தான் மீஷோவின் இலக்கு. குறைந்த விலையில் பேஷன் மற்றும் பிற பொருட்களை தன்னுடைய ஆன்லைன் தளம் வாயிலாக விற்பனை செய்து வாடிக்கையாளர்களை பிடித்தது மீஷோ.

என் வழி தனி வழி!! அமேசான், பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி Meesho சாதித்தது எப்படி?

2015 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த சிறு வணிகர்களுக்கான ஒரு ஆன்லைன் விற்பனை தளமாக தான் தன்னுடைய செயலியை பயன்படுத்த தொடங்கியது. ஆனால் ரீசெல்லிங் என்ற ஒரு நடைமுறை இந்த மீஷோவை பெருமளவில் மக்களிடையே புகழ்பெற செய்தது. பல்வேறு குடும்பத் தலைவிகளும் மீஷோ வாயிலாக பொருட்களை ரீசெல்லிங் செய்து கணிசமான வருமானம் ஈட்டுகின்றனர். இதுதான் நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

மேலும் அமேசான் பிளிப்கார்ட்டை போல சிறு வணிகர்களிடமிருந்து எந்த ஒரு கமிஷனையும் மீஷோ பெற வில்லை. விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து பணமும் நேரடியாக வணிகர்களுக்கு செல்லும். இதனால் பல்வேறு சிறு வணிகர்கள் குறிப்பாக பாரம்பரியமாக பிரத்தியேகமான தொழில்களில் ஈடுபட்டு இருக்கக்கூடிய சிறு வணிகர்களுக்கு மீஷோ மிகச்சிறந்த ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

Also Read

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணமழை!! 8ஆவது சம்பள கமிஷனுக்கு அமைச்சரவை ஒப்புதல்.. தலைவர் அறிவிப்பு!!

இந்தியாவை பொருத்தவரை பெரிய அளவிலான பிராண்ட் இல்லாமல் அந்தந்த பிராந்தியங்களுக்கே உரிய பொருட்கள் அதிகம் . சிறு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் அதிகம். அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஆன்லைன் மார்க்கெட் பிளேசாக உருவாகி தற்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது மீஷோ.

என் வழி தனி வழி!! அமேசான், பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி Meesho சாதித்தது எப்படி?

வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள், காஸ்மெட்டிக் உள்ளிட்டவை அமேசான் பிளிப்கார்ட் உள்ள தளங்களுடன் ஒப்பிடும்போது மீஷோவில் குறைந்த விலைக்கு கிடைக்கும். அதுவே நேரடியாக சிறு வணிகர்களிடமிருந்தே கிடைக்கிறது. மீஷோவின் ஆவரேஜ் ஹார்டர் வேல்யூ என்பது வெறும் 260 ரூபாய் தான் இது பிளிப்கார்ட் அமேசானின் ஆவரேஜ் ஆர்டர் வேல்யூவை விட மிகக் குறைவு இருந்தாலும் அதுதான் மீஷோவின் வெற்றிக்கும் முக்கிய காரணம்.

குறைந்த விலை இருப்பதால் நிறைய பேர் தங்களுடைய செயலியை பயன்படுத்துகின்றனர் இது நிறைய வணிகர்களையும் கொண்டு வருகிறது நிறைய வாடிக்கையாளர்களையும் கொண்டு வருகிறது. தற்போது மீசோவின் 5.75 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவான விற்பனையாளர்கள் இருக்கின்றனர் .அவர்கள் அனைவருமே சிறு உற்பத்தியாளர்கள் தான் .பலருக்கும் ஜிஎஸ்டி உரிமம் கூட கிடையாது. அதே போல 21 கோடி பேர் இந்த செயலி வாயிலாக பொருட்களை வாங்குகிறார்கள்.

Recommended For You

AI உதவியுடன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி!! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!! இது தான் வெற்றிக்கான ரகசியம்!!

பெரிய பிராண்டு அல்லாத சிறு விநியோகஸ்தர்கள் தான் மீஷோவின் அடித்தளம் அவர்களுக்கான ஒரு தளத்தை தான் மீஷோ உண்டாக்கி தந்திருக்கிறது . மீசோவிடம் சொந்தமாக வேர்ஹவுஸ்கள் எதுவுமே கிடையாது அது ஒரு மார்க்கெட் பிளேஸ் ஆக மட்டுமே செயல்படுகிறது.

மீஷாவை பொருத்தவரை லாஜிஸ்டிக் மூலமாகவும் தன்னுடைய தளத்தில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமும் கணிசமான வருமானத்தை பெறுகிறது. 2025 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 9390 கோடி ரூபாய் ஆகும். மீஷோ நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிட இருக்கிறது. இதன் மூலம் திரட்டும் நிதியை கொண்டு மேலும் விற்பனையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஐபிஓ-ஆக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *