உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்

தினப்புயல் • • 1 மணி நேரம் முன்பு • சுமார் 1 நிமிடம்
மேகதாது விவகாரம்: “தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பைப் பற்றிக் கவலையில்லை" – கர்நாடக முதல்வர்
வாசிப்பு
Facebook Telegram

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்குச் சட்டரீதியாக உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று பேசியிருந்தார்.

.

டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், “யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும். அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. இது எனது மாநிலம், எனது உரிமை தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒரு குழுவுடன் இங்கு வரட்டும். அணை கட்டப்பட உள்ள இடத்தைக் காட்டி, இதனால் ஏற்படும் நன்மைகளை அவர்களுக்கு விளக்குகிறேன்.

.

தமிழ்நாட்டில் எந்தக் கட்சி இவ்விவகாரத்தைக் கையில் எடுத்தாலும் இந்த எதிர்ப்பு தொடரத்தான் செய்யும். காங்கிரஸ் கண்டிக்காவிட்டால் திமுக கண்டிக்கும். திமுக கண்டிக்காவிட்டால் அதிமுக கண்டிக்கும். பிறகு அனைவரும் கண்டனம் தெரிவிப்பார்கள். மேகதாது அணைத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதே வேளையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 177 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

.காவிரி: “ தண்ணீர் தர மாட்டேன் என்கிற கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது?"- சீமான் காட்டம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →