உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் – பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

தினப்புயல் • • 10 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் – பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு
வாசிப்பு
Facebook Telegram

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்க ஜனநாயகம்:

ட்ரம்ப் கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → மக்கள் துயரப்படுகிறார்கள் → அடுத்த தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்படுகிறார்.

."தேர்தல் தோல்விக்கு ஈரான் போர் தான் காரணம்; இந்த 4 விஷயங்களை செய்தால் எல்லாம் சரியாகும்" – JD வான்ஸ்.

பைடன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → 40 ஆண்டுகளில் இல்லாத உச்சக்கட்ட பணவீக்கம் உயர்கிறது → பைடன் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுகிறார்.

ட்ரம்ப், ஈரான் போரைத் தொடங்குகிறார் → பெட்ரோல்/கேஸ் விலைகள் ~40% உயர்கின்றன → ட்ரம்பின் கட்சி கொடூரமான தோல்வியைச் சந்திக்கிறது.

இப்படித்தான் ஜனநாயகம் இயங்க வேண்டும்.

மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டால் → ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

.

இந்திய 'ஜனநாயகம்':

மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கிறார் → 15 லட்சம் இந்தியர்கள் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள், பொருளாதாரம் சீர்குலைகிறது → அதைத் தொடர்ந்து வந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி கோவிட் சூழலைச் சரியாகக் கையாளவில்லை → 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள் → பீகார், குஜராத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

மோடி பொருளாதாரத்தைச் சீர்குலைக்கிறார் → நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இளைஞர்களின் வேலையின்மைத் திண்டாட்டம் உயர்கிறது → 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது".

.Elon Musk செலவளித்த $50 கோடி வீண்; டெக்சாஸில் தோற்ற ட்ரம்ப் கட்சி; இது Elon-க்கு பெர்சனல் பின்னடைவு

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →