latest

    இதென்ன புது கூட்டணி


    சினிமா தியேட்டர்களை காலி செய்து வரும் ஓடிடி தளங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் போது பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது. உதாரணமாக நெட்பிளிக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டால் இத்தளத்தில் கேமிங் அறிமுகம் செய்யப்பட்டு பல வகையில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களையும், வருமானத்தையும் பார்க்க முடியவில்லை.

    இதேபோல் அதிக வேக இணையம் உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் வேளையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் தேக்கம் அடைந்துள்ளது. இதே பிரச்சனை தான் அனைத்து டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கும் இருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய நெட்பிளிக்ஸ் மற்றம் Spotify ஒரு முக்கியமான கூட்டணியை அறிவித்துள்ளது.

    இதென்ன புது கூட்டணி

    2026ஆம் ஆண்டு முதல், நெட்பிளிக்ஸ் மற்றும் ஸ்பாடிபை நிறுவனங்கள் இணைந்து வீடியோ பாட்காஸ்ட்களை பகிர்ந்து அவரவர் தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது. இது, இரு நிறுவனங்களின் வர்த்தக உத்தியில் பெரும் மாற்றத்தை குறிக்கிறது, அதேபோல் இது இரு தளங்களின் வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும்.

    தற்போது சந்தையில் பாட்காஸ்ட் என்றால் யூடியூப் தான் ஆதிக்கம் செலுத்துக்கிறது. இந்த புதிய இணைப்பு யூடியூப்-க்கு பதிலளிக்கும் வகையில் உள்ளது.

    நெட்பிளிக்ஸ், ஓடிடி வீடியோவில் முன்னணி, ஸ்பாடிபை இசை மற்றும் ஆடியோவில் ஒரு தலையாய நிறுவனம். இரண்டும் உயர் தர வாடிக்கையாளர்களை தத்தம் துறையில் கொண்டுள்ளன. இரு தளத்திலும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தி சேவைகளை பெருகின்றனர். ஆனால் இத்தளங்களில் போதுமான விளம்பர கட்டமைப்பும், விளம்பர வருவாயும் இல்லாதது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

    யூடியூப் அல்லது பிரைம் வீடியோ போன்றவை விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகத்தால் பெரிய அளவில் பலன் அடைந்து வருகின்றன. இதை ஈடுக்கட்ட கண்டென்ட் பிரிவில் தன்னை மெருகேற்றிக்கொள்ள நெட்பிளிக்ஸ் முடிவு செய்து ஸ்பாடிபியின் பிரபலமான வீடியோ பாட்காஸ்ட்களை தனது தளத்தில் அறிமுகப்படுத்த ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவில் முதல்கட்டமாக தொடங்கி, அடுத்த ஆண்டு இறுதியில் உலகளாவில் விரிவாக்கம் செய்யும் என தெரிகிறது.

    இந்த இணைப்பு, நெட்பிளிக்ஸுக்கு புது விதமான கண்டென்ட் அளித்து புதிய வர்த்தக வாய்ப்பை அளிக்கும். இதேபோல் ஸ்பாடிபை-க்கு, நெட்பிளிக்ஸின் பெரும் வாடிக்கையாளர் தளம் மூலம் புதிய விநியோக பாதையை திறக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வீடியோ பாட்காஸ்ட்-க்கும் ஆர்வத்தை வர்த்தகமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் நெட்பிளிக்ஸ், தனது கண்டென்ட் கேட்டலாக்கை வெப் சீரியஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அப்பால் விரிவுபடுத்துகிறது. இதேபோல் ஸ்பாடிபை தனது வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்துகிறது. இது வெறும் உள்ளடக்க பகிர்வு அல்ல, திரை மற்றும் ஒலி வாடிக்கையாளர்களை உலகளவில் ஒன்றிணைக்கும் முயற்சியாகும்.

    இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் நெட்பிளிக்ஸ் விளம்பர நெட்வொர்க்-ஐ இணைக்கவோ அல்லது உருவாக்கவோ வாய்ப்புள்ளது. மேலும் இனி வரும் காலக்கட்டத்தில் பல சிறு ஓடிடி தளங்கள் தங்களுடைய கண்டென்ட் கேட்லாக்-ஐ விரிவாக்கம் செய்ய இதுபோன்ற இணைப்பையோ அல்லது வர்த்தக கொள்முதலையோ அறிவிக்கலாம்.


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *