ஊழியர் தற்கொலை : ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு!! நடந்தது என்ன?


பெங்களூரு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓசூரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வால் செயல்பட்டு வருகிறார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் அரவிந்த் . கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஓலா நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்த அரவிந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ஊழியர் தற்கொலை : ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு!! நடந்தது என்ன?

அரவிந்தின் இந்த திடீர் முடிவு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணி சார்ந்த அழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்பட்ட குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அரவிந்தின் வீட்டிலும் அறையிலும் ஆய்வு நடத்திய போது அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது.

28 பக்கம் கொண்ட அந்த தற்கொலை கடிதத்தில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக தன்னுடைய இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதை அரவிந்த் எழுதி வைத்திருக்கிறாராம். ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் , பொறியியல் பிரிவு தலைமை அதிகாரி சுப்ரத்குமார் தாஸ் ஆகியோர் தான் காரணம் என குறிப்பிட்டு இருக்கிறார் . தனக்கான சம்பளப் பணத்தை முறையாக வழங்கவில்லை , அவர்கள் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர் என எழுதி வைத்திருக்காராம்.

Also Read

தீபாவளி அதுவுமா மிடில் கிளாஸ் மக்களுக்கு பேரிடி..!! தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை!!

பணி அழுத்தம் மற்றும் இவர்களின் தொலையை எதிர்க்க முடியாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை கைப்பற்றிய காவல்துறையினர் ஓலா அலுவலகத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இந்த தற்கொலை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதில் ஓலா தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் பொறியியல் பிரிவு தலைமை அதிகாரி சுப்ரத்குமார் தாஸ் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே அரவிந்த் தற்கொலை செய்து கொண்ட அடுத்த சில தினங்களிலேயே ஓலா நிறுவனம் அவருடைய வங்கி கணக்கில் 17.46 லட்சம் ரூபாய் வரவு வைத்திருக்கிறது. ஒரு வேளை ஓலா நிறுவனம் பணம் கொடுத்து இந்த பிரச்சினையை தீர்க்க முற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Recommended For You

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஓலா நிறுவனம் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே பவிஷ் அகர்வால் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் வழக்கு விசாரணையில் இருந்தும், முதல் தகவல் அறிக்கையில் இருந்தும் பெயரை நீக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நவாஸ் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் பவிஷ் அகர்வால் உள்ளிட்டோரை தொந்தரவு செய்ய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *