ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.
நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.5) நடைபெற்றது.
.
இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்ன பேசலாம்? நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்று பேசத்தான் போகிறார்கள். அதனால் பேசலாம். ஒரு தம்பி சொன்ன மாதிரிதான்… எல்லோருக்கும் ஹார்ட் லப்டப் லப்டப்னு துடிக்கும். ஆனால் எனக்கு Fans… Fans என்றுதான் துடிக்கும்.
."போதைப்பொருள் பயன்பாடு Fun & Enjoyment-இல் சேர்ந்துவிட்டதா?" – விஜய்யின் பேச்சுக்கு டிடிவி கண்டனம்.
'மாரி 2' படம் பண்ணும்போது சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டாக இருந்தாங்க. ஆனால் இப்போது முழுவதுமாக மாறி, சந்திரமுகி மாதிரி சினிமாவைக் கரைத்துக் குடித்த மாதிரி இருக்காங்க. ரொம்ப சூப்பராகப் பேசுகிறாங்க. ரொம்ப அழகாக இருக்காங்க.
.
மம்முட்டி சார் என்றால் 'தக்லைஃப்', 'தக்லைஃப்' என்றால் அது மம்முட்டி சார்தான். அவர் ரொம்ப ஸ்வீட்டான மனிதர். அவர் நடித்த 'அழகன்' திரைப்படத்தைப் பார்த்து ரசித்தவன் நான். இப்போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பது ரொம்ப சந்தோஷம்" என்று பேசியிருக்கிறார்.
.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
<a href="https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR">https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR</a>
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
<a href="https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR">https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR</a>








