ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி!!

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி!!


மக்கள் தங்களுடைய சமையலில் அதிகமாக பயன்படுத்தக்கூடியவை தான் வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை. வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்ந்தால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் .

இந்தியாவின் ஒரு அண்டை நாட்டில் தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. ஒரே மாதத்தில் ஒரு கிலோ தக்காளி 600 ரூபாய்க்கும் ஒரு தக்காளியின் விலை 75 ரூபாய் என்றும் உயர்ந்திருக்கிறது. இது லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்திருக்கிறது.

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி!!

பாகிஸ்தானை பொருத்தவரை அங்கே வரலாறு காணாத பண வீக்கம் காணப்படுகிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் பல மடங்கு உயர்வு கண்டிருக்கின்றன . இதனால் சாமானிய மக்கள் அன்றாடம் மூன்று வேளை நிம்மதியாக உணவு கூட உண்ண முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். மக்களுக்கு தேவையான பல்வேறு காய்கறிகளின் விலை அங்கே பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

குறிப்பாக தக்காளியின் விலை ஒரே மாதத்தில் அங்கே 400 சதவீத உயர்ந்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் வலுவாக எதிரொலித்து இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் விலைவாசியை குறிப்பிட்டு மிகப்பெரிய அளவில் அமலியில் ஈடுபட்டனர்.

Also Read

மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? வெளியானது முக்கிய அப்டேட்!!

தக்காளி வாங்குவதற்கே வங்கியில் கடன் வாங்கக்கூடிய சூழல் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக அரசை சாடியிருக்கின்றனர். பாகிஸ்தான் எம்பி ஒருவர் ஒரு தக்காளியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து இந்த தக்காளியின் விலை என்ன தெரியுமா ஒரு தக்காளியின் விலை 75 ரூபாய் இதை கஷ்டப்பட்டு தான் மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள் என கூறியிருக்கிறார் .

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி!!

பாகிஸ்தானில் திடீரென தக்காளியின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை மூடப்பட்டது தான் . பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அக்டோபர் 11ம் தேதியிலிருந்து மோதல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இருநாட்டு எல்லையும் மூடப்பட்டு எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு வர வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே வரவில்லை. எனவே மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்து இருக்கிறது .

இரு நாடுகளுக்கு இடையே நடந்த அமைதி பேச்சு வார்த்தையிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஏற்கனவே இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு பிரச்சனை இதனால் இந்தியாவிலிருந்து எந்த ஒரு பொருளும் பாகிஸ்தானுக்கு செல்வதில்லை. தற்போது மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் இரு நாடுகளுக்கும் ஒரு மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

Recommended For You

வீட்டுக் கடன் வட்டியில் பல லட்சங்களை சேமிப்பது எப்படி? ஆர்பிஐ வெளியிட்ட டக்கரான அறிவிப்பு!!

ஒரு ஆண்டுக்கு இரு நாடுகளுக்கும் இடையே 23 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மருந்து ,தானியங்கள் ,சர்க்கரை, மாமிசம் ,பால் பொருட்கள் ,காய்கறிகள் அடங்கும். குறிப்பாக பாகிஸ்தான் தன்னுடைய தக்காளிக்கு பெருமளவில் ஆப்கானிஸ்தானை தான் சார்ந்திருக்கிறது. தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தக்காளி வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கே தக்காளி விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தக்காளி மட்டுமில்லை பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு கிலோ பூண்டு 400 ரூபாய்க்கும் இஞ்சி 750 ரூபாய்க்கும் பட்டாணி 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கட்டு கொத்தமல்லி கூட 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *