உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

போதை மாத்திரை வழக்கில் கைது; அமைச்சர் அருண்ராஜை சந்தித்த நபர் – தஞ்சாவூர் தவெக சர்ச்சை!

தினப்புயல் • • 22 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
போதை மாத்திரை வழக்கில் கைது; அமைச்சர் அருண்ராஜை சந்தித்த நபர் – தஞ்சாவூர் தவெக சர்ச்சை!
வாசிப்பு
Facebook Telegram

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஷோபன் ஹரிஷ்(21). இவரது நண்பர் முகமது லுக்மான்(31). கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காரில் மறைத்து வைத்து 56 பெட்டிகளில் 5,600 போதை மாத்திரைகளை கடத்திய வழக்கில் பட்டுக்கோட்டை போலீஸார் இவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வந்ததாக சொல்லப்படுகிறது.

.

இதையடுத்து, தவெக-வின் தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி மதனுடன் ஷோபன் ஹரிஷ் நெருக்கமாக இருந்ததாக சொல்கிறார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றார் அமைச்சர் அருண்ராஜ்.

.

த.வெ.க நிர்வாகிகள் பலரும் அமைச்சரை சந்தித்து சால்வை போத்தி மரியாதை செய்தனர். இதில் எம்.எல்.ஏ விஜய் சரவணன், மாவட்ட செயலர் ஏனாதி மதன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது, போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷோபன் ஹரிஷ், மதனுடன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஏனாதி மதன் அமைச்சரை அறிமுகப்படுத்தி வைக்க ஷோபன் ஹரிஷ், அமைச்சர் அருண்ராஜ்க்கு சால்வை போத்தி மரியாதை செய்தார்.

இதையடுத்து ஷோபன் ஹரிஷ் அமைச்சருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த, போட்டோ சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தவெக-வின் மாவட்டச் செயலாளருடன் சேர்ந்து அமைச்சரை சந்தித்ததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஷோபன் ஹரிஷ் தவெக-வில் இருப்பதாகவும், கடத்தலில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரிந்தே மதன் அவரை கட்சியில் சேர்த்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

. 40 நிமிட கூட்டம்: 'தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை…' – தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு!

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →