பாதுகாப்புத் துறையில் இயங்கும் Premier Explosives நிறுவனத்தின் பங்குகள், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து புதிய ஆர்டர்களைப் பெற்றதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் 6% மேல் உயர்ந்தன.
இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு ரூ 429.56 கோடி ஆகும். இந்த ஆர்டரின் படி “Chaff’s மற்றும் Flares” சப்ளை செய்ய வேண்டும். இது அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதையடுத்து, பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டன.

Premier Explosives பங்கு இன்று 6.51% உயர்ந்து ரூ 646.15 ஆக இருந்தது. முந்தைய வர்த்தக நாளில் இது ரூ 606.60 ஆக இருந்தது. இன்று, 0.93 லட்சம் பங்குகள் கைமாறின, இதன் மதிப்பு ரூ 5.77 கோடியாகும். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 3375 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் இந்த மல்டிபேக்கர் பங்கு 44% வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளில் 165% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 580% என்ற மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பங்கின் பீட்டா மதிப்பு 1 ஆக இருப்பதால், கடந்த ஒரு ஆண்டில் அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “Premier Explosives Limited நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து, Chaff’s மற்றும் Flares சப்ளை செய்வதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஜிஎஸ்டி உட்பட ரூ 429.56 கோடி, இது அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் சப்ளை செய்யப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, பங்கின் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் (RSI) 49.1 ஆக உள்ளது. இது அதிகப்படியான விற்பனை அல்லது அதிகப்படியான கொள்முதல் மண்டலத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்த பாதுகாப்பு துறை பங்கு 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 150 நாள் மற்றும் 200 நாள் நகரும் சராசரிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது.
Premier Explosives Limited, பாதுகாப்பு, விண்வெளி, சுரங்க மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கு உயர் ஆற்றல் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. ராக்கெட்டுகளுக்கான திட எரிபொருள்கள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணைகளுக்கான ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்கள் தயாரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


