உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"என் அம்மா 3 முறை புற்றுநோயை எதிர்கொண்டவர்; ஆனால்…" – சோனியா காந்தி குறித்து ராகுல் எமோஷனல்

தினப்புயல் • • 9 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"என் அம்மா 3 முறை புற்றுநோயை எதிர்கொண்டவர்; ஆனால்…" – சோனியா காந்தி குறித்து ராகுல் எமோஷனல்
வாசிப்பு
Facebook Telegram

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு நவ.10-ம் தேதி இந்​தியா முழு​வதும் விற்பனைக்கு வந்​தது.

இந்நிலையில் நேற்று டெல்லி நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. இதில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்றிருந்தனர்.

.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, "எனது அம்மா மூன்று முறை புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டவர். ஆனால், அவர் எப்போதும் அதைப் பெரிதாகக் காட்டிக்கொண்டதில்லை. அவர் பயப்படுவதையோ, எந்தச் சூழலிலும் பின்வாங்குவதையோ நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அப்பா, அம்மாவை மிகவும் நேசித்தார்.

இன்று அம்மாவைப் பார்த்து அவர் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார். எங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மிகப்பெரிய இழப்புகள் நிகழ்ந்தன. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், எங்களின் மிகப்பெரிய வழிகாட்டியான எனது தந்தையும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

.'என் அத்தை, கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை..!'- சோனியா காந்தி எமோஷனல் .

எனது அம்மாவுக்கு எல்லாமே நினைவில் இருக்கும். ஆனால், அப்பா இறந்தபோது என்ன நடந்தது என்பது மட்டும் நினைவில் இல்லை. அந்தச் சம்பவங்களை எனது சகோதரியும் அம்மாவும் இணைந்து நினைவுபடுத்திப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். அழகான வாழ்க்கையும் ஆழமான காதலும் ஒரே நாளில் முடிந்துவிட்டன.

எனது பெற்றோர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சண்டையிட்டதை ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். அப்போது அப்பா அமரீந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

.

அம்மா மூன்று, நான்கு முறை ஏதோ சொல்ல, அப்பா கோபமடைந்தார். அதுதான் அவர்கள் சண்டையிட்ட ஒரே சம்பவம். அவர் (சோனியா) என் தந்தைக்குச் சொந்தமானவர். என் தந்தை அவருக்குச் சொந்தமானவர். அதன்பிறகு என் தந்தை காணாமல் போனார். தந்தையின் மரணம் என் தாயாரை மாற்றிவிட்டது. உண்மையாகவே, அவரது வாழ்வின் சுடர் அணைந்துவிட்டது" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

.சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி அருகில் விஜய்; பின் வரிசையில் டி.கே.சிவக்குமார்! .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →