உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!

தினப்புயல் • • 2 நாட்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"Teleprompter பயன்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பிடித்தவரே நடுவர்"- மோடிக்கு ராகுல் சவால்!
வாசிப்பு
Facebook Telegram

இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.

தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மோடி.

அந்தச் சந்திப்பின் போது, மோடி செய்தியாளர்களிடம் பேச டெலி பிராம்ப்டர் பயன்படுத்தியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

"மோடி ஜி, உங்களுடைய சொந்த 'கோடி மீடியா'வின் தீபாவளி சந்திப்பில் கூட டெலிப்ராம்ப்டரா?

.RAC இல்லை, Waiting List இல்லை! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் புதிய நடைமுறை!.

உங்களுடைய ஆள்கள், உங்களுடைய மேடை, உங்களுடைய கூட்டம்—இருந்தும் பேசுவதற்கு உங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் தேவைப்பட்டிருக்கிறது. அழுத்தம் உங்களை ரொம்பவே பாதித்துவிட்டது போலத் தெரிகிறது.

பரவாயில்லை, என்னோடு விவாதத்திற்கு வரும்போதும் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வாருங்கள்;

உங்களுக்குப் பிடித்த ஒரு நடுவரையும் அமர வைத்துக்கொள்ளுங்கள். நேரில் வாருங்கள், அது போதும்.

உண்மையான துரோகி யார் என்பதை இந்த நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது!"

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →