அக்டோபர் 21ஆம் தேதி இந்து நாட்காட்டியான சம்வத் 2082 துவங்குகிறது இது வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் லாபகரமானதாக மாற்றும் நோக்கில் அக்டோபர் 21 ஆம் தேதி சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று நடக்கும் ஒரு சிறப்பு வர்த்தகம் தான், இந்த நிலையில் இந்த சிறப்பு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்களுகள் என பல்வேறு ப்ரோகரேஜ் நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளது.
விக்ரமாதித்யா மன்னரால் கி.மு.57-ல் தொடங்கப்பட்டது தான் இந்த இந்து நாட்காட்டி, புதிய ஆண்டான சம்வத் 2082-ஐ குறிக்கும் விதமாக முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது. சம்வத் 2082 தொடங்கும் வேளையில், முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகளை தேடுகின்றனர். NSE மற்றும் BSE அக்டோபர் 21, 2025 அன்று மதியம் 1:45 முதல் 2:45 மணி வரை ஒரு மணி நேர சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன.

தங்கம், வெள்ளி, பிட்காயின் தாண்டி இந்த புதிய வருடத்தில் முதலீடு செய்ய இந்தியாவின் 11 முன்னணி ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் 11 பங்குகளை வலுவான அடிப்படை, வளர்ச்சி திறன் மற்றும் துறை சார்ந்த சாதகங்கள் என தனித்து நிற்கும் விஷயங்கள் என பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது. இவை பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை, இதேபோல் இந்த பரிந்துரைகள் அடுத்த தீபாவளி வரை லாப வாய்ப்பை அளிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி
வென்ச்சூரா செக்யூரிட்டீஸ், இந்த கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கை ரூ.2,142 இலக்குடன் 106 சதவீத உயர்வு வாய்ப்புடன் பரிந்துரைக்கிறது. ஏஐ, எம்எல் தொழில்நுட்பம் கொண்ட எனர்ஜி நெட்வொர்க் ஆபரேஷன் சென்டர், சோலார் 28 சதவீதம், விண்ட் 42.3 சதவீதம், ஹைப்ரிட் 43.9 சதவீதம் திறன் பயன்பாட்டை அளிக்கிறது.
ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்
ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ், இந்த மருத்துவ நிறுவனத்தின் பங்கை ரூ.1,625 இலக்குடன் பரிந்துரைக்கிறது, 20 சதவீதத்துக்கு மேல் உயர்வு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. இந்த நிறுவனம் பல புதிய மாடலில் தனது வர்த்ததத்தை விரிவாக்கம் செய்து வருகிறது, இது இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓஸ்வால் பம்ப்ஸ்
எஸ்பிஐ செக்யூரிட்டீஸ், இந்த பம்ப் உற்பத்தி நிறுவனத்தின் பங்கை ரூ.970 இலக்குடன் 32 சதவீத உயர்வுடன் பரிந்துரைக்கிறது.
சப்ரோஸ் லிமிடெட்
சாம்கோ செக்யூரிட்டீஸ், இந்த ஏசி சிஸ்டம் நிறுவனத்தின் பங்கை ரூ.2,040 இலக்குடன் 102 சதவீத உயர்வுடன் பரிந்துரைக்கிறது.
கேன்ஸ் டெக்னாலஜீஸ்
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், இந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவை நிறுவனத்தின் பங்கை ரூ.8,900 இலக்குடன் 27 சதவீத உயர்வுடன் பரிந்துரைக்கிறது. ஆட்டோமோட்டிவ், தொழில்துறை, விண்வெளி, ரயில்வே, மருத்துவம், ஐஓடி துறைகளில் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டுகளை இணைத்து இறுதி பொருட்களை உருவாக்குகிறது.
விஏ டெக் வாபாக்
பிரபுதாஸ் லில்லாதர் நிறுவனம், இந்த நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பங்கை ரூ.1,770 முதல் ரூ.1,900 வரை இலக்காக பரிந்துரைக்கிறது, இது அக்டோர் 17ஆம் தேதி பங்கு விலைப்படி 25 சதவீத உயர்வாகும். சமீப சரிவுக்குப் பின் வலுவான ஆதரவு அளவில் இருப்பதால், double bottom pattern உருவாகி, மீட்சி போக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்ஐ குறியீடு போக்கு மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த பங்குகளில் முதலீடு செய்யும் போது ஸ்டாப் லாஸ் ஆக 1270 ரூபாய் அளவையும் பரிந்துரைத்துள்ளது.
எல்டி ஃபுட்ஸ்
மோதிலால் ஓஸ்வால், இந்த உணவு நிறுவனத்தின் பங்கை ரூ.560 இலக்குடன் பரிந்துரைக்கிறது, 34 சதவீத உயர்வு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. தாவத், ராயல் போன்ற வலுவான பிராண்டுகள், 80 நாடுகளுக்கு ஏற்றுமதி, இந்தியா/அமெரிக்காவில் 30-50 சதவீத சந்தை பங்கு ஆகியவை நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது. ஏற்றுமதி மற்றும் பேக்கேஜ் உணவு, ரெடி-டு-ஈட் பிரிவுகளை இந்நிறுவனம் ஊக்குவிக்க உள்ளது.
கிராவிடா இந்தியா
தொழில்துறை கனிமங்கள் மற்றும் உலோகங்கள் அல்லாத துறையில் இயங்கி வரும் கிராவிடா நிறுவனம், ரூ.2,385 இலக்குடன் 52.2 சதவீத உயர்வு வாய்ப்பை இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளகு. தற்போதைய விலை ரூ.1,550 என்ற அளவில் உள்ளது, வலுவான அடிப்படை காரணமாக முதலீட்டுக்கு ஏற்றது.
எம்எஸ்டிசி
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ், இந்த இ-ஆக்ஷன், இ-ப்ரோக்யூர்மென்ட் நிறுவனத்தின் பங்கை ரூ.673 இலக்குடன் 26 சதவீத உயர்வு வாய்ப்புடன் பரிந்துரைக்கிறது. அரசு, பொதுத்துறை, தனியார் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் தளங்கள் வழங்கி, ஸ்கிராப், கனிமங்கள், நிலக்கரி விற்பனையில் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தின் பங்கு வாங்கும் அளவீடாக ரூ.525-548, Add on அளவாக ரூ.463 பரிந்துரை செய்துள்ளது.
யூரேகா ஃபோர்ப்ஸ்
ஜேஎம் ஃபைனான்ஷியல், யூரேகா ஃபோர்ப்ஸ்நிறுவனத்தின் பங்கை ரூ.715 இலக்குடன் 32 சதவீத உயர்வுடன் பரிந்துரைக்கிறது. ஹேவெல்ஸ், டாடா ஸ்வச், வி-கார்ட் போன்ற நிறுவனங்கள் 5 சதவீத சந்தை பங்கை மட்டும் பெற்றுள்ளனர், ஆனால் அக்வாகார்டின் பிராண்ட் தற்போது 40 சதவீத சந்தை பங்கீட்டை வைத்திருக்கும் நிலையில் இதை 62 சதவீதமாக உயர்த்தும் வாய்ப்பை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது இந்நிறுவனம்.
ஜிஎன்ஜி எலக்ட்ரானிக்ஸ்
நிர்மல் பாங் ஈக்விட்டீஸ் நிறுவனம் , இந்த ரீஃபர்பிஷ்ட் லேப்டாப், டெஸ்க்டாப் நிறுவனத்தின் பங்கை ரூ.482 இலக்குடன் 50 சதவீத உயர்வு வாய்ப்புடன் இருப்பதாக பரிந்துரைக்கிறது. செகண்ட் ஹேண்ட் பொருட்கள் விற்பனையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் இது புதிய பொருட்களின் விலையில் மூன்றில் ஒரு விலையில் தரமான பொருட்கள், 1-3 ஆண்டு உத்தரவாதத்துடன் அளிக்கிறது. இதோடு அதன் நெட்வொர்க்-ஐ அனைத்து பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.