சவுதி அரேபியா நாட்டில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் கபாலா முறையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, ஜூன் 2025இல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசராக இகுக்கும் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பல வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை தனது விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில் நவீன கால அடிமைத்தனமாக விமர்சிக்கப்பட்ட கபாலா முறையை MBS ரத்து செய்துள்ளார்.

இந்த அறிவிப்பு மூலம் சுமார் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்களை நேரடியாக பலன் அளிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற இந்தியர்களுக்கு பலன் அளிக்கும்.
சவுதி அரேபியாவின் இந்த முக்கியமான சீர்திருத்தம், வளைகுடா பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் மனித உரிமைகளுக்கான மைல்கல்லாக பாராட்டப்படுகிறது. இந்த மாற்றம், நாட்டின் பொருளாதார சீரமைப்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கபாலா முறை என்றால் என்ன
Kafala system- கபாலா என்ற அரபு சொல், ஸ்பான்சர்ஷிப் என்பதைக் குறிக்கிறது. 1950களில் தொடங்கப்பட்ட இந்த முறை, கச்சா எண்ணெய் உற்பத்தி துறையின் வளர்ச்சியால் அந்நாட்டிற்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களை சவுதி அரேபிய நிறுவனங்களும், முதலாளிகளும் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட முறை.
ஆரம்பத்தில் இந்த முறை பலன் அளித்தாலும், இந்த Kafala முறையில் இருக்கும் விதிகள் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சமமற்ற அதிகார உறவை உருவாக்கியது, முதலாளிகளின் ஆதிகாரம் உயர்தது.
இந்த Kafala system கீழ் ஒரு வெளிநாட்டு தொழிலாளர்கள் எங்கு வேலை செய்ய வேண்டும், எங்கு வசிக்க வேண்டும், சட்ட உதவிகள் நாடுவது வரையில் பல நெருக்கடியை உருவாக்கியது. இதில் முக்கியமான பிரச்சனையாக இருந்தது வெளிநாட்டு தொழிலாளர்களின் பாஸ்போர்ட் பறிமுதல், ஊதிய தாமதம், சொந்த ஊருக்கு செல்ல தடை போன்ற முதலாளிகளின் துன்புறுத்தல்கள் அதிகமாக இருந்தன.
இதனாலேயே இந்த முறையை, நவீன அடிமைத்தனமாக விமர்சிக்கப்பட்டது. வீட்டு வேலை செய்யும் பெண்கள் உட்பட, பலர் இதில் அதிகம் பாதிக்கப்பட்டனர், சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்கான குரல் இல்லாமல் தனிமைபடுத்தப்பட்டு, பல வகையில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டனர்.
சவுதியின் வெளிநாட்டு தொழிலாளர்கள்
சவுதி அரேபியாவில், சுமார் 13.4 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர், இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 42 சதவீதமாகும். அந்நாட்டின் வளர்ச்சியே வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி தான் உள்ளது. இருப்பினும் அந்நாட்டு நிறுவனங்களும், தொழிலாளர்களும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பல வகையில் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
சவுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டுமானம், வீட்டு வேலை, விவசாயம் போன்ற குறைந்த ஊதிய துறைகளில் தான் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் அதிகம்.
கத்தார் 2022 உலகக் கோப்பைக்கு முன் பல வேலைவாய்ப்பு சீர்திருத்தங்களை செய்தது போல, தற்போது சவுதியும் இந்த மாற்றம் Kafala system முழுமையாக நீக்கியுள்ளது.
புதிய முறையிலால் ஏற்படும் மாற்றங்கள்
Kafala system ரத்து செய்யப்பட்டது மூலம் புதிய தொழிலாளர் ஒப்பந்தம் அடிப்படை முறையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளி அல்லது அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அனுமதி இன்றி வேலை மாற்றலாம். நாட்டை விட்டு வெளியேற எக்ஸிட் விசா பெற முதலாளி அல்லது அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை.
முதலாளி அல்லது பணியாற்றும் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு நடக்கும் துன்புறுத்தல்களை புகார் செய்ய தொழிலாளர் நீதிமன்றங்களை அணுக முடியும். இந்த சீர்திருத்தங்கள், உலக தரத்துடன் சவுதியின் தொழிலாளர் சட்டங்களை இணையாக வைக்கும். இதனால், திறமையான உலக தொழிலாளர்களை ஈர்க்கப்பட்டு சவுதி பொருளாதாரம் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.