கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், ‘திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது’ என விமர்சிக்கிறார் எடப்பாடி. முக்கியமாக, டெல்டா மாவட்டங்களுக்கு பயணித்து திமுக அரசை அட்டாக் செய்துள்ளார். பின்னணியில், ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ எனும் அரசியல் கணக்கும் உள்ளது. அங்கு மொத்தம் 27 தொகுதிகளில், ஐந்தில் மட்டுமே அதிமுக வெற்றி. இதை மூன்று மடங்காக உயர்த்த, மூன்று வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் எடப்பாடி. இன்னொரு பக்கம் இந்த பயணத்தின் மூலம், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு ஷாக் கொடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.