latest

பெரும் வீழ்ச்சி.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000 வரை சரிய வாய்ப்பு.. SAMCO நிபுணர் எச்சரிக்கை.!

[ad_1]

சர்வதேச சந்தையில் நிலவி வந்த நிச்சயமற்ற சூழலால் மின்னும் உலோகமான வெள்ளியின் விலை சமீபத்தில் உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட திடீர் விலை வீழ்ச்சி, சரக்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் இந்த திடீர் சரிவு குறித்து SAMCO செக்யூரிட்டீஸின் சந்தை கண்ணோட்டம் மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் அபூர்வா ஷெத் அளித்திருக்கும் விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து 18% வீழ்ச்சி : சமீபத்தில் ஒரு கிலோ வெள்ளி, ஸ்பாட் சந்தையில் (அஹமதாபாத்) ரூ.1,77,794 என்ற உச்ச விலையைத் தொட்டது. ஆனால், தற்போது அதன் விலை ரூ.1,45,967 ஆக குறைந்துள்ளது. அதாவது, அதன் உச்ச விலையில் இருந்து கிட்டத்தட்ட 18% சரிவை வெள்ளி சந்தித்துள்ளது. இந்த அதிரடி வீழ்ச்சி முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது.

பெரும் வீழ்ச்சி.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000 வரை சரிய வாய்ப்பு.. SAMCO நிபுணர் எச்சரிக்கை.!

அபூர்வா ஷெத் கருத்துப்படி, வெள்ளி ஏற்கனவே அதிக சூடான நிலையை அடைந்துவிட்டது. சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிய அதீத உற்சாகம், குறுகிய கால உச்சத்திற்கான ஒரு கிளாசிக் அறிகுறி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளி விலை ரூ.1,10,000இல் இருந்து ரூ.1,70,000 வரை மிக வேகமாக உயர்ந்தது. இது ஒரு மிகப் பெரிய ஏற்றம் என்று சொல்லலாம். ஆனால், இந்த வேகமான உயர்வுக்கு பிறகு தற்போது விலை வரைபடத்தில் “Head and Shoulders” எனப்படும் தலை மற்றும் தோள்கள் வடிவம் உருவாகி வருகிறது.

இந்த “Head and Shoulders” அமைப்பு என்பது தொழில்நுட்ப பகுப்பாய்வில் மிகவும் பிரபலமான திருப்ப அமைப்பு ஆகும். அதாவது, சந்தை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், இப்போது வாங்குபவர்கள் சோர்வடைந்து, விற்பவர்கள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டை பெறத் தொடங்குகிறார்கள் என்பதை இது குறிக்கிறது.

தற்போது வெள்ளியின் விலை ஏற்கனவே இந்த வடிவத்தின் கழுத்துப் பகுதியை உடைத்து கீழே வந்துவிட்டது. தற்போதைய விலை நிலவரங்களான ரூ.1,40,000 என்பது, முந்தைய பேரணியின் 50 சதவீத Fibonacci retracement புள்ளியுடன் கிட்டத்தட்ட துல்லியமாகப் பொருந்துவதாக ஷெத் விளக்கியுள்ளார்.

மேலும், ரூ.1,38,000 முதல் ரூ.1,40,000 வரையிலான நிலை ஒரு முக்கியமான குறுகிய கால ஆதரவுப் புள்ளி என்றும், இங்கு ஒரு தொழில்நுட்ப மீட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அபூர்வா ஷெத் கூறியுள்ளார். இருப்பினும், இந்த நிலை உடைந்தால், வெள்ளி மேலும் ரூ.1,33,000 என்ற நிலையை நோக்கிப் பின்வாங்கக் கூடும். இந்த விலையில்தான் வலுவான வாங்கும் ஆர்வம் உருவாக வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

அதாவது, வெள்ளி விலைகளில் தற்போது நடைபெறும் சரிவு என்பது கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல, மாறாக அது ஒரு ஆரோக்கியமான திருத்தம் என்று பார்க்கப்பட வேண்டும். நீண்டகால Bull market (ஏற்றம் நீண்டநாள் தொடரும் சந்தை) இன்னும் முடிவடையவில்லை. இந்தச் சரிவு அதன் இடைநிறுத்தத்தில் தான் உள்ளது.

முன்பு சந்தையில் காணப்பட்ட அதிகப்படியான உற்சாகம் (எதிர்பார்ப்புகள், திடீர் வாங்குதல், அதிக விலையிலான நுழைவு போன்றவை) இப்போது மெதுவாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், இப்போது நடக்கும் இந்த சரிவு வெள்ளியின் நீண்டகால ஏற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்கும் என்று ஷெத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நீண்ட கால ஏற்றம் குறித்த தனது நம்பிக்கை இன்றும் உறுதியாக இருப்பதாக ஷெத் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். அதே நேரத்தில், அவர் முன்பு வழங்கியிருந்த குறுகியகால எச்சரிக்கை தற்போதைய சந்தை சரிவால் சரியானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *