தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்தும் விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், “அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் குறித்தும் பேசினோம். இது கட்சியுடைய core கமிட்டி.
அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு Common SOP வேண்டுமென உயர் நீதிமன்றத்தை அனுகியிருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் வரைமுறைகளை வகுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த வரைமுறைகள் வந்த பிறகு பிரசாரத்தை தொடர்வோம்.
