தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான ஜெயக்குமாரிடமும், திமுக மாநிலங்களவை எம்.பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடமும் பேசினோம். அதன் தொடராக தவெக அரசுக்கு ஆதரவளித்துவரும் இடதுசாரி கட்சிகளிடம் பேசினோம். அதனடிப்படையில் நம்மிடம் பேசிய சிபிஐ தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், “தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சியாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் வாக்களித்து 108 இடங்களை வழங்கினர்.

ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கிலே…

சட்டப்படியும், ஜனநாயகப்படியும் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் முறையானது என்பதால், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நாங்கள் முதலில் குரல் எழுப்பினோம். தொடர்ந்து ஆட்சி அமைக்கவும் ஆதரவளித்தோம். மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாங்கள் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், த.வெ.க. அமைச்சரவையிலோ அல்லது கூட்டணியிலோ இடம்பெறவில்லை என்றாலும், ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கிலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்தோம்.
.தவெக 6 மாத ஆட்சி: “அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" – நாராயணன் திருப்பதி.

வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை…

இந்த அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும், தொழிலாளர்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் எளிய மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதும் எங்களின் தொடர்ச்சியான வலியுறுத்தலாகும். குறிப்பாக, மதச்சார்பின்மை கொள்கையில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களில், தூய்மைப் பணியாளர் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை நிறுத்தியது, போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை ஓரளவுக்கு நிறைவேற்றியது மற்றும் லஞ்சம், ஊழல் கூடாது என்று கூறுவது போன்ற சில வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த ஆட்சி மக்களுக்கு முழுமையான நம்பிக்கை தருவதாக அமையவில்லை. நாடு முழுவதும் 13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், முதலமைச்சர் அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் கடந்து செல்கிறார். சட்டம்-ஒழுங்கு சீர்குலையும்போது முந்தைய ஆட்சியைக் குறை கூறுகிறாரே தவிர, தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை. மேலும், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் முதலமைச்சர் அதற்குப் பொறுப்பேற்க மறுக்கிறார்.
.தவெக 6 மாத ஆட்சி: “முதலமைச்சரின் கட்டுப்பாட்டை மீறி நிர்வாகம் சென்றுவிட்டது.!" – அதிமுக ஜெயக்குமார்.

முதலமைச்சரின் தலையாய கடமை!

அதிகாரிகள் எவ்விதத் தலையீடுமின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும், அதிகாரிகள் சொல்படி ஆட்சி நடக்கும் என்றும் முதலமைச்சர் கூறுகிறார். நேர்மையான மற்றும் நல்ல அதிகாரிகள் விஷயத்தில் இது சரியான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால், அதிகாரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.
தவறுகள் கட்சிக்குள் நடந்தாலும் சரி, வெளியில் நடந்தாலும் சரி, அவற்றைக் களைவதும், சுட்டிக்காட்டி கண்டிப்பதும் முதலமைச்சரின் தலையாய கடமையாகும்.

அந்த வகையில், ஏழை எளிய மக்களின் ஏராளமான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றைத் தீர்ப்பது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தவறுகள் கட்சிக்குள் நடந்தாலும்!

மேலும், ஒன்றிய அரசின் மனம் நோகாமல் ஆட்சி நடத்துவது எப்படி என்பதை விட, ஏழை எளிய மக்களின் மனம் நோகாமல் ஆட்சி நடத்துவது எப்படி என்பதில்தான் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துப் பேசியும் அது குறித்து எந்த நடவடிக்கையோ அல்லது தகவலோ வெளிவரவில்லை.
.தவெக 6 மாத ஆட்சி: “ஓர் அரசின் பயணத்தைத் தெரிந்துகொள்ள 6 மாதங்கள் போதும்"- திமுக எம்பி கான்ஸ்டன்டைன்.
முதலமைச்சர் என்பவர் அதிகாரத்தின் குறியீடு. எனவே, தவறுகள் கட்சிக்குள் நடந்தாலும் சரி, வெளியில் நடந்தாலும் சரி, அவற்றைக் களைவதும், சுட்டிக்காட்டி கண்டிப்பதும் அவரது தலையாய கடமையாகும். எளிய மக்களின் கிடப்பில் போடப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, பெரிய அளவிலான தவறுகள் தன் கவனத்திற்கு வரும்போது, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தர வேண்டிய கடமையும் அவருக்கு உள்ளது." என்றார்.
.“பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" – வானதி சீனிவாசன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb