உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

“தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" – டிடிவி தினகரன் கேள்வி!

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
“தவெக ஆட்சியில் விசிக அமைச்சரும் Reels எடுத்தே தீர வேண்டுமா?" – டிடிவி தினகரன் கேள்வி!
வாசிப்பு
Facebook Telegram

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நவம்பா் 10-ம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அழைத்துச் சென்றனார். அங்கு போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு முன் அடா்ந்த வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று நடந்து சென்றது. இதனைப் பாா்த்ததும் விரட்டிச் செல்வது போல் அவா் ஓடும் வீடியோ, மற்றொரு வீடியோவில், அவர் காட்டு யானை ஒன்றை நெருங்குவது போன்ற காட்சிகள் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்களில் அமைச்சர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

.

அதைத் தொடர்ந்து வனத்துறையினார் எவ்வாறு அமைச்சரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதித்தனர் என்று வன ஆா்வலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினர், `அமைச்சர் தங்கியிருந்த அச்சகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தப் புலி காணப்பட்டது, அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கவில்லை' என்று தெரிவித்துள்ளனர்.

.

இந்த விவகாரம் தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னியரசு அவர்களின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள், வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

.

தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

.

அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

.

எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

.“சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் போராட்டம் மூலம் ஊதிப் பெரிதாகக் காட்டுகிறார்கள்" – அமைச்சர் வன்னி அரசு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →