உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' – உச்ச நீதிமன்றம் அனுமதி

தினப்புயல் • • 11 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
`திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!' – உச்ச நீதிமன்றம் அனுமதி
வாசிப்பு
Facebook Telegram

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்படுவதோடு, இது தொடர்பாக கூடுதல் ஆவணங்களைச் சமர்பிக்க 6 வார கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய உத்தரவு இடைக்கால உத்தரவு மட்டுமே, வழக்கின் விசாரணையை பாதிக்காது.

.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் வரும் 24.11.2026 அன்று அரசாங்க பாதுகாப்போடு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்படுகிறது. தேவசம் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் விளக்கேற்றுதல் செய்யப்படும். மதுரை காவல் ஆணையர் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தீபம் ஏற்றியதை உறுதி செய்து மாவட்ட ஆட்சியர் 3 நாள்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம், தேவைப்பட்டால் சி.ஆர்.பி.எஃப் உதவியை நாடலாம்.

.

தேவைப்பட்டால், மத்திய அரசும் பாதுகாப்பை நியமிக்கலாம். விளக்கேற்றும் சடங்கிற்குப் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" எனக் கூறி, இறுதி விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம்  அனுமதியளித்த நிலையில், மதுரையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →