இந்தியா மீது 250% வரி.. டிரம்ப் மிரட்டல்.. தென்கொரியாவில் நடந்தது என்ன..?


உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு தென்கொரியாவில் நடந்து வருகிறது, இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்க அதிபரான டிரம்ப் தென் கொரியாவுக்கு வந்துள்ளார்.

இவரின் வருகைக்கு முக்கியமான காரணம் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திக்கவும், இந்த சந்திப்பில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான்.

இந்தியா மீது 250% வரி.. டிரம்ப் மிரட்டல்.. தென்கொரியாவில் நடந்தது என்ன..?

இந்த நிலையில் Gyeongju-வில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் மத்தியிலான போரை நிறுத்தியது குறித்து விரிவாக பேசினார். இந்த கூட்டத்தில் இதுவரையில் டிரம்ப் சொல்லாத பல விஷயங்களை கூறியுள்ளார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கார்ப்ரேட் தலைவர்கள் உடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட டிரம்ப் பேசுகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் மத்தியில் வெடித்த போரை நான் தலையிட்டு முடித்து வைத்தேன், மோடி மிகவும் நல்லவர், இப்போது இரு நாடுகளுடன் பேசுகையில் 250 சதவீதம் வரியை விதிப்பேன் என மிரட்டினேன் என கூறினேன்.

இதேபோல் மோடியுடனும், பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் உடன் பேசுகையில் போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகள் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது எனவும் தெரிவித்தேன் என டிரம்ப் தெரிவித்தாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது. இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும், போருக்கும் வர்த்தகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி என்னிடம் வாதிட்டது.

ஆனால் நான் திட்டவட்டமாக கூறினேன், அடுத்த 24 மணிநேரத்தில் இருவரும் போரை நிறுத்தாவிட்டால் எவ்விதமான ஒப்பந்தமும், வர்த்தகம் அமெரிக்கா செய்யாது என தெரிவித்தேன் என டிரம்ப் கூறினார். மேலும் அவர் பேசுகையில் இந்த போரில் 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் கூறினார். டிரம்ப்-ன் பேச்சு மீண்டும் இரு நாடுகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்பு மே 10 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் உடனடியாகவும், முழுமையாகவும் தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். இந்த டிவீட்டில் இரு நாடுகள் மத்தியிலும் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தாக தெரிவித்தார்.

ப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு (26 பொதுமக்கள் இறப்பு) பதிலடியாக இந்தியா மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்புகளை தாக்கியது. இதில் பல தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து மே 10 அன்று, நான்கு நாட்கள் ட்ரோன்-ஏவுகணை தாக்குதல்களுக்குப் பின், இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த முடிவு செய்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *