latest

திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்களே குட்நியூஸ்!! இந்த மாத இறுதிக்குள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!!


இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 50 சதவீத இறக்குமதி வரியை விதிக்கிறது.

இந்திய பொருட்களுக்கு முதல்கட்டமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப் கூடுதலாக 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதிக்கிறது. இது இந்தியாவை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ,தோல் பொருள் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் ,நகை மற்றும் நவரத்தின துறைகளை சேர்ந்தவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்களே குட்நியூஸ்! இம்மாத இறுதிக்குள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர் , ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையையும் அமெரிக்க வாடிக்கையாளர்களையும் கொண்டுதான் தொழிலையே நடத்தி வருகின்றனர். இந்த 50 சதவீத இறக்குமதி வரி இவர்களின் தொழிலையே முடங்கிப் போக செய்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் தான் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே மிக தீவிரமாக வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 50 சதவீதமாக வரி விதிக்கப்படக்கூடிய சூழலில் மிண்ட் தளம் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தியின் படி 15 முதல் 16 சதவீதத்திற்குள் இந்த இறக்குமதி வரி என்பது குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னாள் தான் தலைமை பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை எட்டும் எனக் கூறியிருந்தார் .அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்திய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி என்பது கணிசமான அளவு குறையும் என்ற ஒரு நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில் தான் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் இறக்குமதி வரி என்பது 15 அல்லது 16 சதவீதம் என குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

Also Read

தங்கம், வெள்ளி விலையை உயர்த்தி மிகப்பெரிய போருக்கு தயாராகும் அமெரிக்கா மற்றும் சீனா!!

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி இடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது விரைவில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கணிசமான அளவு குறைக்கும் என்றும் கூறியிருந்தார் . டிரம்பை பொறுத்தவரை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறித்தான் கூடுதலாக 25% வரியை விதித்தார்.

எனவே இந்த அனைத்து சூழல்களுமே இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய பொருட்களுக்கான வரி குறைவதற்கு ஒரு சாதகமான சூழல் உண்டாகி இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் நீண்ட காலமாகவே பிரச்சினையாக இருப்பது அமெரிக்காவை சேர்ந்த வேளாண் மற்றும் பால் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என்பது தான்.

இந்தியா அது உள்நாட்டில் விவசாயிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும் எனக் கூறி மறுப்பு தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில் குறிப்பிட்ட சில மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க சோளம் உள்ளிட்டவற்றை இந்திய சந்தைக்குள் அனுமதிக்க இந்திய தரப்பு ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை .

Recommended For You

சுந்தர் பிச்சை தலையில் இடியை இறக்கிய ChatGPT.. கூகுள் குரோமுக்கு போட்டியாக வந்துவிட்டது அட்லாஸ்!!

இந்த மாத இறுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகிவிடும் என்றும் இருநாட்டு தலைவர்களுமே இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்திய பொருட்களுக்கான வரி குறைந்தால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான ஜவுளி உற்பத்தியாளர்கள் , தோல்பொருள் உற்பத்தியாளர்கள், நகை மற்றும் நவரத்தின உற்பத்தியாளர்கள் ,கடல் சார்ந்த உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பலன் பெறுவார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *