உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
வழக்கமான இடத்தில் தீபம்; தூணில் தீபமேற்றாததால் போராட்டம்… பதற்றம்… போர்க்களமான திருப்பரங்குன்றம்
வாசிப்பு
Facebook Telegram

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் 25 ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கபட்டனர். ஆனாலும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமெனக் கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

.

இதனிடையே திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் போடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, "உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

மாலை 6 மணியளவில் வழக்கமாக தீபம் ஏற்றபடும் இடமான உச்சிபிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தூணிலும் தீபம் ஏற்றபடும் என ஆவலோடு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்போது பக்கத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்காக பாடல் வழக்கமாக ஒலிக்கப்பட்டது. உடனே அங்கு குழுமியிருந்தவர்கள் 'பார்த் மாதாகி ஜே' எனக் கோஷங்களை எழுப்பினர்.

.

தொடர்ந்து  நீண்ட நேரமாகியும் தூணில் தீபம் ஏற்றப்படாததால் கோபமடைந்தவர்கள் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பேருந்து மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

.திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" – நீதிபதி

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →