உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் நொடிக்கு நொடி பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp செயல்பட்டு வருகிறது. மார்க் ஜக்கர்பக்கின் மெட்டா நிறுவனம் தான் வாட்ஸ் அப் செயலியின் உரிமையாளர்.
பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில் புதிய புதிய அப்டேட்டுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது . அந்த வகையில் கூடிய விரைவில் வாட்ஸ் அப் செயலியில் ஒரு முக்கியமான வசதி கொண்டு வரப்பட இருக்கிறது. வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்கள் தேவையற்ற மெசேஜ்களை பெறுவதை குறைக்கும் வகையில் வாட்ஸ் அப் மெசேஜ்களை அனுப்பும் எண்ணிக்கையில் ஒரு வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான வசதியை கொண்டு வர இருக்கிறது.

அதாவது ஒரு நபர் மற்றொரு நபருக்கு மெசேஜ் அனுப்புகிறார் அந்த நபர் அதற்கு பதில் அளிக்கவில்லை அப்படி அவர் பதில் அளிக்காமல் தவிர்க்கும் சூழலில் இந்த நபர் திரும்ப திரும்ப மெசேஜ் அனுப்பி கொண்டே இருக்கிறார். இதற்கு தான் முற்றுப்புள்ளி வைக்க போகிறது வாட்ஸ் அப்.
இவ்வாறு பதில் கிடைக்காத நபருக்கு ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மெசேஜ்கள் அனுப்ப முடியும் என ஒரு வரம்பினை நிர்ணயிக்கக் கூடிய வசதியை தான் வாட்ஸ் அப் தற்போது பரிசோதனை செய்து வருகிறது . இனி உங்களுக்கு பிடிக்காத நபர்கள் அடிக்கடி உங்களுக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ய முடியாது .
ஒரு மாதத்திற்கு எத்தனை மெசேஜ்கள் அனுப்ப முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால் இது தனிப்பட்ட மெசேஜாக இருந்தாலும் சரி அல்லது மார்க்கெட்டிங் அல்லது வேறு சில தொழில் ரீதியாப மெசேஜ்களாக இருந்தாலும் சரி எதிர் தரப்பிலிருந்து உங்களுக்கு பதில் வரவில்லை என்றால் அதிலிருந்து அந்த மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மெசேஜ்களை மட்டுமே நீங்கள் அனுப்ப முடியும்.
மேலும் நீங்கள் மெசேஜ் அனுப்பும்போது குறிப்பிட்ட இந்த நபர் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை தொடர்ந்து அவரிடம் உரையாட விரும்புகிறீர்களா என பாப் அப் நோட்டிஃபிகேஷன் காட்டும். ஏராளமான நிறுவனங்கள் பிராட்காஸ்ட் மற்றும் தங்களுடைய பிசினஸ் அக்கவுண்ட் வாயிலாக பலருக்கும் மெசேஜ்களை அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.
சிலர் பெண்களுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்கிறது. பெரும்பாலான பயனர்கள் இந்த மெசேஜ்களை ஓபன் செய்து படிப்பது கூட கிடையாது . இந்த தேவையற்ற மெசேஜ்கள் வருவதை குறைக்கும் நோக்கில் தான் இப்படி ஒரு வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ் அப் முடிவு செய்து இருக்கிறது. முதலில் பீட்டா பயனர்களுக்கும் பின்னர் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதியை விரிவாக்கம் செய்ய வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது.