[ad_1]
தங்கம், வெள்ளி ,வைரம் ,கச்சா எண்ணெய் உள்ளிட்டவை தான் அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் என நாம் நினைக்கிறோன். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு விலை உயர்ந்த ஒரு பொருள் இருக்கிறது . அது ஒரு மரம் என்றால் நம்புவீர்களா?
உலக சந்தையில் அதிகம் தேவைப்படும் ஆனால் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ஒரு மரம் இது. இந்த ஒரு மரம் இருந்தால் இன்றைய தேதியில் நீங்கள் கோடீஸ்வரராக இருப்பீர்கள் . அன்பிலார்யா எனப்படும் ஒருவித மர இனத்தில் காணப்படும் பிசின் மரம் தான் அகர்வுட். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஒரு மரமாக இது பார்க்கப்படுகிறது.

தனித்துவமான நறுமணம் கொண்ட இந்த மரத்திலிருந்து தான் பல்வேறு வாசனை திரவியங்கள், மருந்துகள், தூபங்கள் ,உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மரத்தில் கிடைக்க கூடிய பிரத்தியேகமான நறுமணம் என்பது பல ஆண்டுகளாக இந்த மரத்தில் ஏற்படக்கூடிய ஒரு வகை பிசினால்தான் கிடைக்கிறது. இதனால் தான் இந்த மரம் உலகிலேயே விலை உயர்ந்த மரமாக பார்க்கப்படுகிறது.
மிக அரிதாக கிடைக்கக்கூடிய மரம் மற்றும் சிறப்பான நறுமனம் கொண்ட இந்த மரம் இந்தியா ,மலேசியா ,தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசியா காடுகளில் கிடைக்கிறது. உலகின் மிக உயர்ந்த வாசனை திரவியங்களில் ஒன்றாக அகர்வுட்டில் இருந்து தயாரிக்கப்படும் OuD வாசனை திரவியம் இருக்கிறது. இந்த வாசனை திரவியம் உலக அளவில் மிகவும் பிரபலமானது .

அதேபோல தியானம் செய்யக்கூடிய இடங்களில் கூட இந்த அகர்வுட்டால் செய்யப்பட்ட தூபம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இதனை பயன்படுத்துகிறார்கள். உலக அளவில் இந்த மரங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது ஆனால் இவ்வகை மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு கிலோ அகர்வுட்டின்ப் விலை 50 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆடம்பரமான வாசனை திரவியங்கள், ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவம் , கோயில்கள் மற்றும் மசூதிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கிராம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு கூட சில இடங்களில் விற்பனை செய்கிறார்கள் , ஒரு அரிய வகையான பூஞ்சை தொற்று அக்குவிலாரியா மரத்தில் ஏற்படும் போதுதான் இந்த அகர்வுட் என்பதே உருவாகிறது. அதாவது இந்த மரம் ஒரு வகை பிசினை உண்டாக்குகிறது அதுதான் இந்த அரிய வாசனையை அதற்கு வழங்குகிறது . இதனால் இதனை மரங்களின் கடவுள் என அழைக்கிறார்கள். தங்கம் கூட ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி விடலாம் ஆனால் இந்த மரத்தை வாங்க ஒரு கோடி ரூபாய் வேண்டும் . பணக்காரர்கள் எல்லாம் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.
[ad_2]

