பெட்டி பெட்டியாக வந்திறங்கிய தங்கம்!! ரிசர்வ் வங்கி எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?


உலகம் முழுவதுமே தங்கத்தை பற்றி தான் தற்போது பேசுகிறார்கள். தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் ஒரு பக்கம், பல்வேறு நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது மறுபக்கம் என எங்கு பார்த்தாலும் தங்கம் தான் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி சேமித்து வைத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் கூட இதே நடவடிக்கை தான் பின்பற்றுகின்றன .பாதுகாப்பான முதலீடு, டாலரின் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்டவை காரணமாக தங்களின் தங்க இருப்பை அதிகப்படுத்தவே உலக நாடுகளின் மத்திய வங்கிகள் விரும்புகின்றன.

பெட்டி பெட்டியாக வந்திறங்கிய தங்கம்!! ரிசர்வ் வங்கி எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியும் அதே பாணியை தான் பின்பற்றுகிறது. தங்கத்தை வாங்கி குவிப்பதோடு மட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கி திடீரென ஒரு முடிவினை எடுத்து இருக்கிறது . இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்தாலும் ஒரு கணிசமான அளவிலான தங்கத்தை வெளிநாடுகளில் தான் வைத்து இருக்கிறது. அவற்றை தற்போது தாயகத்திற்கு படிப்படியாக கொண்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டில் இருந்த தங்களுக்கு சொந்தமான 64 டன்கள் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கிறது. செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 880.8 டன்கள் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது. இதில் 575.8 டன்கள் தங்கம் இந்தியாவிற்குள்ளேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தங்கம் பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆப் இன்டர்நேஷனல் சென்டில்மெண்ட் ஆகிய வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளன.

Also Read

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? பாபா வாங்கா வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

2023ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவுக்கு சொந்தமான பெரும் பகுதி தங்கம் வெளிநாட்டு வங்கிகளில் தான் சேமிக்கப்பட்டு இருந்தன. ஆனால் 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருந்த தங்கத்தை தாயகம் கொண்டு வர தொடங்கியது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரிசர்வ் வங்கி வெளிநாட்டு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 274 டன்கள் தங்கத்தை தாயகம் கொண்டு வந்திருக்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல், ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி கைப்பற்றியது இதனை அடுத்து ஜி7 நாடுகள் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் வெளிநாட்டு நாணய இருப்புகளை முடக்கியது உள்ளிட்டவை காரணமாகவே ரிசர்வ் வங்கி வெளிநாட்டில் இருக்கும் தங்கத்தை தாயகத்திற்கு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி ஒரு நடவடிக்கையாக தான் இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் 64 டன்கள் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கிறது.

Recommended For You

மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? வெளியானது முக்கிய அப்டேட்!!

பைண்ட்ரீ மேக்ரோ நிறுவனத்தின் தலைவரான ரித்தேஷ் ஜெயின் ,நம்முடைய தங்கம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது நம்முடைய இல்லை என்ற சூழல் உலகம் முழுவதும் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார். இந்த நவீன உலகத்தில் நம்முடைய தங்கம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற உத்தியே இதற்கு பின்னணி என கூறுகிறார்.

உலக நாடுகள் அனைத்துமே மிகப்பெரிய தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிக தங்கம் வாங்குவதிலும் இருக்கும் தங்கத்தை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. எதிர்காலமே தங்கமாக தான் இருக்க போகிறது என சொல்லப்படும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *