latest

24 மணி நேரத்தில் 3 முறை குறைந்த தங்கம் விலை!! இனி தங்கத்துக்கு இறங்குமுகம் தானா?


சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் அதிசயத்தக்க வகையில் சென்னையில் ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்தது .

செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரண்டு முறை விலை குறைந்து 11,540 ரூபாயாக இருந்தது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிந்து 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 மணி நேரத்தில் 3 முறை குறைந்த தங்கம் விலை!! இனி தங்கத்துக்கு இறங்குமுகம் தானா?

நேற்று ஒரே நாளில் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3:30 மணி என இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்தது. மீண்டும் இன்று காலை 9.30 மணிக்கு தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது 24 மணி நேரத்திலேயே தங்கம் விலை 3 முறை சரிவடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3680 ரூபாய் சரிவடைந்தது இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் விலை குறைந்து 92 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 24 மணி நேரத்திலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 4000 ரூபாய் சரிந்து இருக்கிறது. சாமானிய மக்களுக்கு இந்த விலை குறைவு சற்றே நிம்மதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது .24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 43 ரூபாய் விலை குறைந்து 12,546 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,00, 368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!

18 கேரட் தங்கமும் கிராம் 9650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் விலை சார்ந்து 77,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் விலை குறைந்திருக்கிறது . கிராமுக்கு ஒரு ரூபாய் விலை சரிந்து 174 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1, 74,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

உஷார்.. அமெரிக்க பொருளாதாரம் சரிந்தால் தங்கத்தின் நிலை என்ன? நிதி நிபுணரின் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ரீடெய்ல் சந்தையில் சரிவடைந்து வருகிறது. தங்கம் விலை குறைவு இப்படி நீடிக்க வேண்டும் என்பதே மிடில் கிளாஸ் மக்களின் விருப்பமாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்த்தது, அமெரிக்கா சீனா மற்றும் அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் சாதகமான சூழல் ஆகியவை தங்கத்திற்கான டிமாண்டை குறைத்து விலையை குறைக்க செய்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் தங்கம் மற்றும் வெள்ளியில் தற்போது திருத்தம் நடைபெறுவதாகவும் சில காலத்திற்கு இவ்வாறு விலை குறைந்து மீண்டும் தங்கம் விலை உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்ம்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *