latest

WTO-ல் இந்தியா மீது புகாரளித்த சீனா – ஏன்? | China complaints India over rules violation in WTO


“இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்’ என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.

இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக,

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் அட்வான்ஸ்ட் கெமிக்கல் செல் பேட்டரி ஸ்டோரேஜ் தயாரிப்புகள்,

ஆட்டோமொபைல் சார்ந்த உற்பத்திகள், பயணிகள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியாவிற்குள் தயாரிக்க ஊக்குவித்து இந்திய அரசு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.

இந்தத் திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிகளை குறைக்கவும் செயலாற்றுகிறது.

இன்னும் மிக முக்கியமாக, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முயலுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள்

எலெக்ட்ரிக் வாகனங்கள்
சித்தரிப்பு படம்

இதில் சீனாவுக்கு என்ன பாதிப்பு?

உலகளவில் ஆட்டோமொபைல் பாகங்கள், எலெக்ட்ரிக் பேட்டரிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் இந்தத் திட்டங்களால் சீனாவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றலாம்.

அடுத்ததாக, சீனாவிடம் இந்தப் பொருள்களை வாங்கி வரும் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பலாம். இதனால், சீனாவின் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்படையலாம்.

சீனா இந்தியாவை பெரியளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தையாக பார்க்கிறது. இந்தியாவிலேயே சலுகைகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது, இறக்குமதி வாகனங்களை விட, இந்த வாகனங்களின்‌ விலை குறைவாக இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *