தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று சென்னையின் அடையாறு பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் மா சுப்பிரமணியன், “அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி தூர் வாரியிருக்கிறார்கள். இந்த அடையாற்றில் ஒரே நேரத்தில் 40,000 அடி கன அளவு தண்ணீர் வந்தாலும் குடியிருப்புகளைப் பாதிக்காது. 500, 750 அடி என நீர்மட்டம் உயர்வதைப் பார்த்து யாரும் அச்சப்பட வேண்டாம்.