விசாரணைகள் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் கரூருக்கு நேரில் சென்று, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து தலா ரூ. 1 லட்சம் காசோலை வழங்கினார்.
அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தலா ரூ. 50,000 காசோலையாக உயிரிழந்தோர் குடும்பங்களிடம் தரப்பட்டது.
இந்த நிலையில் விஜய் அறிவித்தபடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு த.வெ.க சார்பில் தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தமாக உயிரிழந்த 41 பேரில் 39 குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 2 பேரின் குடும்பங்களில் யாரிடம் நிதி வழங்குவது என்பதில் சிக்கல் நிலவுவதால் விரைவில் உரிய நபரிடம் நிதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தலா ரூ. 2 லட்சம் கூடிய சீக்கிரம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.