பிரதமரின் பேச்சு
“பாதுகாப்பு படைகளின் துணிச்சலாலும் வீரத்தால் நம் நாடு கடந்த சில ஆண்டுகளில் மற்றொரு இலக்கை எட்டியிருக்கிறது. இது மாவோயிசத்தைப் பற்றியது. மாவோயிசத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான விளிம்பில் நம் நாடு இருக்கிறது.
2014ம் ஆண்டு இந்தியாவில் 125 மாவட்டங்கள் மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்போது வெறும் 11 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் தாக்கம் இருக்கிறது.

100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பாதிப்பிலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன. மக்கள் கண்ணியத்துடன் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.” என்றார்.
மேலும் மாவோயிஸ்டுகளால் பள்ளிக் கூடங்கள், மருத்துவமைகள் கட்டுவது தடுக்கப்பட்ட, சாலைகள் போடுவது, தொழில்கள் தொடங்கப்படுவது தடுக்கப்பட்ட இடங்கள் தற்போது வளர்ச்சி பெறுவதாகவும் மோடி பேசியுள்ளார்.
“நக்சல்களால் பாதிக்கப்பட்டிருந்த அதே பிராந்தியங்களில், நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன, புதிய வணிகங்கள் வேரூன்றியுள்ளன, பள்ளிகளும் மருத்துவமனைகளும் குழந்தைகளுக்கான புதிய எதிர்காலத்தை உருவாக்குகின்றன” என்று மோடி கூறினார்.
இவையெல்லாம் பாதுகாப்பு படையினரின் துணிச்சல், உறுதி மற்றும் தியாகத்தினாலே சாத்தியமானது என்றும் அவர் பேசியுள்ளார்.