வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு | We will prevent disenfranchisement; Stalin opposes Election Commission’s SIR move


பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது.

இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது.

Election Commission - SIR

Election Commission – SIR

இந்த நிலையில், “வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம்” என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது.

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க-வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *