உள்ளடக்கத்திற்குச் செல்
உலகம்

98 கோடி பங்குகள், 83 டாலர் விலை… பங்குச்சந்தைக்கு வரும் AI நிறுவனம் Anthropic; முழு விவரம்

தினப்புயல் • • 20 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
98 கோடி பங்குகள், 83 டாலர் விலை… பங்குச்சந்தைக்கு வரும் AI நிறுவனம் Anthropic; முழு விவரம்
வாசிப்பு
Facebook Telegram

பிசினஸ்கள் தொடங்கி மொபைல் போன்கள் வரை அனைத்திலும் ஏ.ஐ சிறப்பு இடம் பிடித்துவிட்டன. நிகழ்காலத்திலேயே நிரம்பியிருக்கும் ஏ.ஐ, எதிர்காலத்தில் எல்லாமுமாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு.

அதனால், ஏ.ஐ துறையில் வேலைவாய்ப்பு முதல் சந்தை வரை அனைத்திலும் சிறப்பான வாய்ப்புகள் உண்டு. இதனால், இந்தத் துறையை மிஸ் செய்ய யாரும் விரும்பமாட்டார்கள்.

அமெரிக்க ஏ.ஐ நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic, PBC) இன்று (நவம்பர் 19 – அமெரிக்க நேரப்படி) தங்களுடைய ஐ.பி.ஓக்களை நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் பட்டியலிட இருக்கிறார்கள்.

.ட்ரம்ப், புதின், ஜின்பிங் சந்திப்பு: 3 வல்லரசு தலைவர்கள் ஒரே இடத்தில்! யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?.

இது குறித்து ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள்…

சாதாரணப் பங்குகளான ‘கிளாஸ் ஏ’ பங்குகளின் ஐ.பி.ஓ விலை: 83 டாலர்.

எத்தனை கிளாஸ் ஏ பங்குகள் விற்பனைக்கு வருகின்றன?

98 கோடி. இதில் 95,63,51,354 பங்குகளை ஆந்த்ரோபிக் நிறுவனமும், மீதமுள்ள 2,36,48,646 பங்குகளை நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குதாரர்களும் விற்பனை செய்கின்றனர்.

பங்குதாரர்கள் விற்கும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகை ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குச் சேராது.

.

எப்போது வர்த்தகத்திற்கு வருகிறது?

நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் ‘ANT’ குறியீட்டின் கீழ், இந்தப் பங்குகள் நவம்பர் 19-ம் தேதி வர்த்தகத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான நடைமுறை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, இந்தப் பங்கு வெளியீட்டு நடைமுறைகள் நவம்பர் 20, 2026 அன்று நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக 14,70,00,000 ‘கிளாஸ் ஏ’ பங்குகளை வாங்குவதற்கான 30 நாள் விருப்ப உரிமையை பங்கு வெளியீட்டு மேலாளர்களுக்கு ஆந்த்ரோபிக் வழங்கியுள்ளது.

.Gold: ரூ.97,720-க்கு சறுக்கிய தங்கம் விலை; 2027-ம் ஆண்டு விலை என்னவாகும்? – நிபுணர் விளக்கம்

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →