உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை
வாசிப்பு
Facebook Telegram

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

.

சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்ததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் கோட்டாட்சியர், வாடிப்பட்டி வட்டம், சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ₹2.32 கோடி மற்றும் ₹3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்த புகார்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் இரு வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான  மதுரை  அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து முதலாவது நீதித்துறை நடுவர் தகவல் அளிக்கப்பட்டு தற்போது மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

.

சோதனை நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுகவினர் அவருடைய வீட்டின் முன்பு கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →