உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

“இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை" – சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்!

தினப்புயல் • • 2 நாட்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
“இந்திய கூட்டணி பேரணியில் ஏன் பங்கேற்கவில்லை" – சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே விளக்கம்!
வாசிப்பு
Facebook Telegram

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்திய கூட்டாணி தலைவர்கள் சார்பில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்த சிஜேபி அதில் கலந்துக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது. சனிக்கிழமை மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, “இந்தியா கூட்டணியின் போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும், தோழமையையும் தெரிவிக்கிறோம். ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு சுயசார்புடைய அமைப்பு. இது ஒரு நடுநிலையான தளம்.

.

அதை அப்படியே நிலைநிறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். வாக்காளர் பட்டியலின் உண்மைத் தன்மையை மீட்கப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்," என்று தெளிவுபடுத்தினார். அதைத் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில், “SIR மூலமாக வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை சீர்குலைக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் மீட்டெடுக்க அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்." எனவும் பதிவிட்டிருந்தார்.

.இந்தியா கூட்டணி பேரணி: “நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " – விமர்சிக்கும் பாஜக

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →