உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

”கட்சிப் பதவி வாங்கித் தரேன்”- தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாசமெசேஜ் அனுப்பினாரா?

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
”கட்சிப் பதவி வாங்கித் தரேன்”- தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாசமெசேஜ் அனுப்பினாரா?
வாசிப்பு
Facebook Telegram

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் தவெக-வின் நகரச் செயலாளர் பாரதிராஜா. இவர் தவெகைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கட்சியில் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

அப்பெண் திருமணமானவர். இவரது கணவர் கருப்புசாமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதிராஜா, தவெக நிகழ்ச்சிகளுக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ்அப்பிற்கு பாரதிராஜா, ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.

.

இந்நிலையில், பெண்ணின் கணவர் கருப்புசாமி மனைவியின் செல்போனைப் பார்த்துள்ளார். அப்போது பாரதிராஜா தன் மனைவிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கிறார். இதுகுறித்து தன் மனைவியிடம் கேட்டிருக்கிறார்.

இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, கருப்புசாமி மனைவியை அடித்ததாகச் சொல்கிறார்கள். வலி தாங்கமுடியாத அவர் மனைவி வல்லம் காவல் நிலையத்திற்கு கணவர் கருப்புசாமி மீது புகார் அளிக்க சென்றதாகச் சொல்லப்படுகிறது.

."உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை…" – கனிமொழி.

போலீஸார், எதற்காக கணவர் மீது புகார் அளிக்கிறாய் என்றதற்கு, ''அவர் என்னை அடித்தார்; அதனால் புகார் அளிக்க வந்துள்ளேன்'' என்றிருக்கிறார். உடனே போலீஸ், கருப்புசாமியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர், ''தவெக-வைச் சேர்ந்த பாரதிராஜா ஆபாச மெசேஜ் அனுப்பியிருக்கிறார் அதை என்னிடம் சொல்லவில்லை. பல முறை இது நடந்துள்ளது'' என்று சொல்லியிருக்கிறார்.

.

உடனே, அந்தப் பெண், ''அப்பப்ப மெசேஜ் அனுப்புவார், கட்சியில் பதவி வாங்கி தர்றதாகவும் சொன்னார்'' என்றதாகத் தெரிகிறது. இதையடுத்து போலீஸ் பாரதிராஜாவை அழைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், பாரதிராஜா மனைவி மற்றும் அம்மாவை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இனி இதுபோல் நடக்காது, இது வெளியே தெரிந்தால் பாரதிராஜா எதிர்காலம் பாதிக்கும், தவெக-வில் நல்லா பேரோட இருக்கான் இத்தோட இந்தச் சம்பத்தை மறந்திடுங்க சமாதானம் பேசியதாகச் சொல்கிறார்கள்.

.திருப்பரங்குன்றம்: `ஏன் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை?'- தவெக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி விவகாரம் தவெக அரசுக்குப் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் சமாதானமாகச் செல்வதாக போலீஸாரிடம் சொல்ல உடனே, போலீஸார் இருதரப்பையும் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஆனால் கமுக்கமாக முடிக்க பார்த்தும் இது வெளிச்சத்திற்கு வர திமுக-வினர் இதனைப் பதிவிட்டு ட்ரோல் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

இதுகுறித்து பாரதிராஜாவிடம் பேசினோம், ''கட்சிக்காக என் முழு நேரத்தையும் செலவிடுகிறேன். நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் வளர்ச்சி பொறுக்காமல் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரே காழ்ப்புணர்ச்சியில் தவறான தகவலைப் பரப்புகின்றனர். அந்தப் பெண் என்னுடைய போட்டோவைப் போட்டு லவ் சாங்க் எடிட் செய்து செல்போனில் வைத்திருக்கிறார்.

இதுவே பிரச்னைக்குக் காரணம். நான் எந்த மெசேஜும் அனுப்பவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கவும் இல்லை. விசாரிக்கவும் இல்லை. பேசி முடித்த ஒன்றை நான் எந்தத் தவறும் செய்யாத போது, நடக்காத ஒன்றை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இது போன்று அவதூறு பரப்புகின்றனர்'' என்றார்.

.போராடும் விவசாயிகள்; நெருக்கும் எதிர்க்கட்சிகள்! – டெல்டாவில் என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →