"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. ஆனால், அதை முழுதாக உருவாக்க இஸ்ரேல் விடாது" என்று இஸ்ரேல் சொல்லியிருந்தது.
ஏற்கெனவே ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்றுதான் ஈரான் மீது போரைத் தொடங்கியன அமெரிக்காவும், இஸ்ரேலும்.
இப்போது ரசாயன ஆயுதக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது இஸ்ரேல்.
.
இஸ்ரேலின் குற்றச்சாட்டிற்கு அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி…
"அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரியல் ஆயுதங்களைத் தடை செய்யும் அனைத்துச் சர்வதேச உடன்படிக்கையிலும் இணைய இஸ்ரேல் மறுத்துவிட்டது.
.'இந்தியப் பொருட்களுக்கு 25% வரி' – அமெரிக்கா முன்மொழிவு; வர்த்தக ஒப்பந்தத்தால் 17% ஆகக் குறையுமா?.
நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களைக் கைவசம் வைத்துள்ள இஸ்ரேல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, மூன்று நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்தும் உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும், ஈரானுக்கு எதிரான இரண்டு தோல்வியடைந்த போர்களில் அமெரிக்காவையும் அது இழுத்துவிட்டுள்ளது.
.
இப்போது, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள, ரசாயன ஆயுதத் தடை அமைப்பின் உறுப்பு நாடான ஈரான் மீது போர் வெறிபிடித்த இஸ்ரேல் ஆட்சி வெட்கமின்றிப் பழி சுமத்துகிறது.
மேற்கு ஜெர்மனியால் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வழங்கப்பட்ட ரசாயன ஆயுதங்களால் தானே பாதிக்கப்பட்ட ஈரான், மருந்துத் தொழிற்சாலைகளில் அத்தகைய கொடிய ஆயுதங்களை உருவாக்கி மறைத்து வைத்திருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது.
இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் துணிச்சலான சதித்திட்டமாகும். தனக்காக மற்றொரு போரை நடத்தும்படி அமெரிக்காவை ஏமாற்றித் தூண்டிவிடுவதே இதன் நோக்கம்".
.ஜெம் வீரமணி வழக்குகள்: 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு








