உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

நூலக நூல் கொள்முதல் ஊழல்: “அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்…" – சிபிஎம் சண்முகம்

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
நூலக நூல் கொள்முதல் ஊழல்: “அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்…" – சிபிஎம் சண்முகம்
வாசிப்பு
Facebook Telegram

கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் சிபிஎம் சண்முகம், இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகம்” முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில், ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

.

இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன், “பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, நூல் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் எடுத்துரைத்துள்ளார்.

நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் பின்பற்றப்பட வேண்டிய அரசு விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் இத்தகைய விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில், முறையற்ற வழிகளில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.

.

ஒருபுறம் பொதுமக்களின் வரிப்பணம் சூறையாடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் அறிவுக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களைக் கொண்ட நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை நூலகத்தில் இடம்பெற்றுள்ளதன் மூலம் அறிவுத் தளத்திலும் மோசடி அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்ச் சமூகத்தை அறிவாார்ந்த திசையில் வழிநடத்த வேண்டிய நூலகத்திலேயே இத்தகைய அறிவு மோசடி நடைபெற்றிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே, பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்த குழுவில் இடம்பெற்றவர்கள் யார் ? இத்தகைய தரமற்ற, போலியான நூல்களை வாங்குவதற்கு அவர்கள் எவ்வாறு ஒப்புதல் அளித்தனர் ? இந்த முறைகேடுகளுக்குத் துணைபோனவர்கள் யார் ? எப்போது டெண்டர் விடப்பட்டது ?

.

எப்போது கொள்முதல் செய்யப்பட்டது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகப் பதிலளிப்பதே பொருத்தமானது. அரசு உடனடியாக தமிழ் அறிஞர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும், நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து போலியானவை என உறுதிப்படுத்தப்படும் நூல்களை உடனடியாக நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு புலன் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து முறைகேடுகள், மோசடிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

.

மேலும், அரசு நூலகங்களில் நூல்கள் கொள்முதல் செய்யும்போது அரசின் விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்துவதுடன், அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்..

.பெரியார் நூலகம்: "நூல் கொள்முதலில் ஊழல்" – பெருமாள் முருகனின் குற்றச்சாட்டும் ராஜ்மோகனின் பதிலும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →