மதுபானக் கொள்கையால் டில்லி அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு: சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றச்சாட்டு


இதைத் தொடர்ந்து இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஆக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமினில் வெளியே வந்தனர். இருவரும் பதவி பறிபோன நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சி.ஏ.ஜி., அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யபா.ஜ., அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக சி.ஏ.ஜி., அறிக்கையை சட்டசபையில் பா.ஜ., அரசு தாக்கல் செய்துள்ளது.
அதில்,குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதிக்கப்படாததால், ரூ.941.53 கோடியும்
லைசென்ஸ் திருப்பி அளிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் டெண்டர் விடாத காரணத்தினால் ரூ.890.15 கோடியும்
கோவிட் காரணம் காட்டி, கட்டணத்தை தள்ளுபடி செய்ததால் ரூ.144 கோடியும்
ஜோனல் லைசென்ஸ் வழங்குவதற்கு பாதுகாப்பு கட்டணத்தை முறையாக வசூலிக்காத காரணத்தினால் ரூ.27 கோடி என மொத்தம் ரூ.2,002.68 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், விதிகளை முறையாக பின்பற்றவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சஸ்பெண்ட்
முன்னதாக இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுடில்லி: முந்தைய கெஜ்ரிவால் அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு காரணமாக டில்லி அரசுக்கு ரூ.2,002 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
டில்லியில் 2021-2022 ம் நிதியாண்டில் அரசின் மதுபானக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
ABOUT US
Founder
Anandhan vairaperumal
Online news publisher
dinapuyalmedia@gmail.com

