"அண்ணன் வர்ராரு"! தமிழகம் முழுவதும் மார்ச்சில் விஜய் சுற்றுப்பயணம்? சீனில் வந்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வரும் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் இந்த சுற்றுப்பயணத்திற்கான பொறுப்புகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு நடைபெறுகிறது. கிட்டதட்ட 370 நாட்களில் விஜய் ஒருமுறை கூட மக்களையோ பத்திரிகையாளர்களையோ சந்தித்ததில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே அவர் தனது அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் மாவட்ட பொறுப்பாளர்களை 3 கட்டமாக நியமித்துள்ளார். பூத் ஏஜென்ட்டுகளும் நிரப்பப்பட்டுள்ளனர். அவர் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகளையும் வேகமாக முடித்துவிட்டு அரசியலில் முழு வீச்சில் இறங்க தயாராகிவிட்டார். அண்மையில் கூட அவர் சென்னை டிபி சத்திரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.

தொடரை வென்றது இந்தியா: ரோகித் சர்மா சதம்

கட்டாக்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாச, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், குல்தீப்பிற்கு பதிலாக கோலி, வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

50வது முறை
ஒருநாள் போட்டிகளில் நேற்று 50வது முறையாக கேப்டனாக களமிறங்கினார் ரோகித். 50 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய 8வது வீரரானார். இப்பட்டியலில் தோனி (200 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் அசார் (174), கங்குலி (146), கோலி (95), டிராவிட் (79), கபில் தேவ் (74), சச்சின் (73) உள்ளனர்.

* 2017ல் கேப்டனாக களமிறங்கிய ரோகித், 50 போட்டிகளில் 36ல் வெற்றி தேடித் தந்துள்ளார். 12 தோல்வி, ஒரு 'டை', ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

மூன்றாவது இடம்

ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர்களில் மூன்றாவது இடம் பெற்றார் ரோகித் (32). முதல் இரு இடங்களில் சக வீரர்களான கோலி (50), சச்சின் (49)) உள்ளனர். நான்காவது இடத்தில் பாண்டிங் (ஆஸி., 30 சதம்) உள்ளார்.

* சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் (49, டெஸ்டில் 12, ஒருநாள் போட்டியில் 32, டி-20ல் 5). முதல் இரு இடங்களில் சச்சின் (100, டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 49), கோலி(81, டெஸ்டில் 30, ஒருநாள் போட்டியில் 50, டி-20ல் 1) உள்ளனர்.

* ஒருநாள் அரங்கில் நேற்று தனது இரண்டாவது அதிவேக சதம் அடித்தார் ரோகித் (76 பந்து). ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது அதிவேக சதத்தை (63 பந்து, டில்லி, 2023) பதிவு செய்துள்ளார்.

புதுடெல்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில், இரவு 10 மணியளவில் நடைமேடை 14-ல் புறப்பட தயாராக நின்றிருந்தது.

அந்த நேரத்தில் ஏராளமான பயணிகள் 14 ஆவது நடை மேடையில் நின்றிருந்தனர். பயணிகள் காத்திருந்த அந்த நேரத்தில் சுதந்திரா சேனானி விரைவு ரயிலும், புவனேஷ்வர் ராஜ்தானி ரயில்களும் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Sanjay Dutt: சஞ்சய் தத்திற்கு ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை; பின்னணி என்ன?

மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துவிட்டார்.

நிஷா பாட்டீல் என்ற அந்த 62 வயது ரசிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தபோது தனது பெயரில் வங்கியில் உள்ள பணத்தை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி கடிதம் எழுதினார்.

இது குறித்து வங்கி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் நடிகர் சஞ்சய் தத்தை அணுகி ரசிகையின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதனைக் கேட்டு சஞ்சய் தத் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதோடு அந்த சொத்திற்கு உரிமை கோரப் போவதில்லை என்றும், அது தனக்குத் தேவையில்லை என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சஞ்சய் தத் வழக்கறிஞர் இது குறித்துக் கூறுகையில், ''நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துக்கள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


வங்கியில் இருக்கும் பணம் மற்றும் இதர சொத்துக்கள் என மொத்தம் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சஞ்சய் தத்திற்குக் கொடுக்கும்படி, கூறி உயில் எழுதி வைத்துவிட்டு நிஷா பாட்டீல் உயிரிழந்துவிட்டார். சஞ்சய் தத்திற்கு ரூ.300 கோடி அளவுக்குச் சொத்துக்கள் இருக்கிறது. ஒரு படத்திற்கு 8 முதல் 12 கோடி ரூபாய் வரை சஞ்சய் தத் சம்பளம் வாங்குகின்றார். துபாயிலும் சஞ்சய் தத்திற்குச் சொந்த வீடு இருக்கிறது.