"விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்" என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் – தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் – அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
."குறுவை போச்சு; சம்பாவும் கருகுது; விவசாயிகளுக்கு Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?"- ஸ்டாலின்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








