உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" – அதிமுக இன்பதுரை

தினப்புயல் • • 9 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" – அதிமுக இன்பதுரை
வாசிப்பு
Facebook Telegram

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி கொடுப்பதாக ஒருவர் கூறியதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

.

அமைச்சர் ராஜ்மோகனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபர் யார், யாருடைய பெயரில் இந்தப் பேரம் பேசப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் என்ன? என்று அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜ்மோகனின் பேச்சையே ஆதாரமாகக் கொண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

."'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" – 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்.

இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை தவெக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

.

லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும்.

ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →