உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" – செனட்டர் அப்துல் எல்-சையத்

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" – செனட்டர் அப்துல் எல்-சையத்
வாசிப்பு
Facebook Telegram

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இது குறித்து அமெரிக்க (மிச்சிகன்) செனட்டர் அப்துல் எல்-சையத்திடம் நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சர்வதேசச் சட்டத்தை நாம் பின்பற்றுகிறோம் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இது வெறும் இஸ்ரேல் பற்றியது மட்டுமல்ல.

."வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்!" – சூர்யா 'ஓபன்' டாக்.

எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான்…

எனது குடும்பம் புலம்பெயர்ந்து வந்த எகிப்து நாட்டிற்கும் நான் இதையேதான் பொருத்திப் பார்க்கிறேன். பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் நான் இதே அணுகுமுறையைத்தான் கையாள வேண்டும்.

சர்வதேசச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் நாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

.

இஸ்ரேல் நல்ல தொடக்கம்

சர்வதேசச் சட்டங்களை மீறுவதற்காக நம்மிடமிருந்து பெறும் பணத்தைப் பயன்படுத்தும் ஒரு நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்துவது ஒரு நல்ல தொடக்கம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இஸ்ரேல் நாட்டில் இனப்படுகொலை மற்றும் இனவெறிக் கொடுமை போன்ற மிக மோசமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விற்பனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார்.

."மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" – டி.கே.சிவக்குமார்

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →