<a href="https://www.vikatan.com/government-and-politics/rahul-gandhi-challenges-pm-modi-to-open-debate-over-foreign-help">‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’</a> என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி. நேரம் மற்றும் இடத்தையும் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
நிர்மலா சீதாராமன் சாடல்
ராகுல் காந்திக்குப் பதிலடி தருவதுபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘விவாதத்திற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. ஆனால், அங்கே எதிர்க்கட்சிகள் விவாதிக்காமல், அவையை இழுத்தடிக்கிறார்கள்’ என்று தனது <a href="https://www.vikatan.com/government-and-politics/modi-rahul-debate-row-sitharaman-hits-back-at-congress-leader">எக்ஸ் பக்கத்தில்</a> பதிவிட்டிருந்தார்.
.இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?.
மேலும், ‘காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் நீங்கள் சமீபத்தில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தியிருந்தீர்கள்’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி இல்லத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தைச் சாடியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் பதில்
நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், “நிர்மலா ஜி, உண்மைகளை முதலில் தெரிந்துகொள்வோம்.
முதலாவதாக, அது ஒன்றும் மாதிரி நாடாளுமன்றம் அல்ல. அது ஞானேஷ் குமார் மீது, அரசியலமைப்பு சார்ந்த கண்ணியத்துடனும் தீவிரத் தன்மையுடனும் நடத்தப்பட்ட ஒரு பகிரங்கப் பதவிநீக்க விசாரணை நடவடிக்கை.
அதில் நாடாளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் எதுவுமில்லை.
.
கேலிக்கூத்து என்பதைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அக்டோபர் 30-ம் தேதி தால்கட்டோரா ஸ்டேடியத்தில் அமித் ஷா ஜியின் ஆதரவோடு அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்தைப் பாருங்கள். அதுதான் உண்மையான கேலிக்கூத்து!
எஸ்.ஐ.ஆர் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான உண்மைகள் மிகவும் தீவிரமானவை, வலுவான ஆதாரங்கள் கொண்டவை மற்றும் உடனடியாகப் பதிலளிக்க வேண்டியவை என்பதற்காகவே ராகுல் ஜி விவாதத்தைக் கோருகிறார்.
மக்களவையில் இந்த விவாதத்தைச் சந்திக்க மோடி ஜியையும் அமித் ஷா ஜியையும் சம்மதிக்க வைத்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் ஜி முற்றிலும் தயாராகவே இருக்கிறார்.
.
இங்கு உண்மையான கேள்வி ராகுல் ஜி தயாராக இருக்கிறாரா என்பதில்லை. நாடாளுமன்றத்தில் எழும் கேள்விகளை எதிர்கொள்ள மோடி ஜி தயாராக இருக்கிறாரா என்பதுதான்!
பொறுப்புக்கூறலைக் கோருவது ஒன்றும் குற்றமல்ல. ஆய்வுகளையும் கேள்விகளையும் தட்டிக் கழிப்பது நல்ல தலைமைத்துவமும் அல்ல.
நாங்கள் பிரதமரிடம் அதையேதான் மீண்டும் சொல்கிறோம்…
பயப்படாதீர்கள், மோடி ஜி.
நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்.
விவாதத்தை எதிர்கொள்ளுங்கள்.
கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








