உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"Ukraine நலனைப் பலி கொடுத்து போர்நிறுத்தம் கூடாது" – ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜெலன்ஸ்கி

தினப்புயல் • • 1 மணி நேரம் முன்பு • சுமார் 1 நிமிடம்
"Ukraine நலனைப் பலி கொடுத்து போர்நிறுத்தம் கூடாது" – ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஜெலன்ஸ்கி
வாசிப்பு
Facebook Telegram

ரஷ்யா – உக்ரைன் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றும், இந்தப் போர்நிறுத்தம் குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் பேசியிருப்பதாவது…

"தற்போதைய பேச்சுவார்த்தைக் குழு இந்தப் போரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்று நான் நம்புகிறேன்.

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் போர் நேற்றே முடிந்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம்.

.திருப்பரங்குன்றம்: "விஜய்யைச் சுற்றி மாயக்கோட்டை…" – என்ன சொல்கிறார் அண்ணாமலை?.

என்னுடைய பார்வையில், அமெரிக்கக் குழு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் இதற்கு ஒரு தீர்வு காண விரும்புகிறது. நாங்களும் அதையேதான் பெரிதும் விரும்புகிறோம்.

ஆனால், உக்ரைனின் நலன்களை மட்டும் பலி கொடுத்து இது நடந்துவிடக் கூடாது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறிவிட்டேன்.

பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான முடிவையும் எட்டாமல், ரஷ்யர்கள் தொடர்ந்து எதுவுமே தெரியாததுபோல நடித்துக் கொண்டு பழைய வரலாற்றுக் கதைகளையே பேசிக்கொண்டிருந்தால், அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகும் தருணம் நிச்சயம் வரும்.

.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

ஆனால் அதே சமயம், புதிய அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு கட்சிகளுடனும் நாங்கள் நிச்சயமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை விதிக்கக் கோருவோம்; எங்களுக்கான ஆதரவையும் திரட்டுவோம். அது இல்லாமல் இதனைச் சாதிப்பது சாத்தியமே இல்லை.

ரஷ்யர்கள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்றால், அவர்கள் அதற்காக நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். ஒருவரால் அவர்களை நிர்ப்பந்திக்க முடியவில்லை என்றால், வேறு யாராவது அதைச் செய்தே ஆக வேண்டும்.

.

எனவே, புதிய சூழ்நிலைகளோ அல்லது புதிய மனிதர்களோ களத்திற்கு வர வேண்டும். அல்லது, உக்ரைனுக்கு மிக வலுவான ஆதரவும், ரஷ்யாவுக்கு எதிராக மிகக் கடுமையான தடைகளும் விதிக்கப்பட வேண்டும்.

அதன் மூலம், 'இனி பேச்சுவார்த்தை மேஜைக்கு வந்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை' என்ற தெளிவான செய்தி ரஷ்யர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்"

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →