உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" – நிர்மலா சீதாராமன்

தினப்புயல் • • 14 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" – நிர்மலா சீதாராமன்
வாசிப்பு
Facebook Telegram

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிப்பது தொடர்பானதாகும்.

டாடா குழுமப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

.Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?.

இதன் பிறகு, டாடா குழும நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் விருந்து நடந்தது ஏன் என்கிற கேள்வியை ராகுல் காந்தி கேட்டிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுக்கவோ, விளக்கமளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், டாடா சன்ஸ் விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்…

"டாடா குழும விவகாரம் மிக மென்மையாகவும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய விவகாரம் என்று நினைக்கிறேன். இங்கு வணிகம் மற்றும் தொழில்சார்ந்த அறிவும், வணிக ரீதியான இணக்கமான சூழலும் இணைந்து செயல்பட வேண்டும்.

.

எனவே, இந்த விஷயம் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், நான் உடனடியாக எதையும் எளிதாகச் சொல்லிவிட முடியாது.

டாடா நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பும், டாடாவை ஒரு மிகப்பெரிய உலகளாவிய பிராண்டாக மாற்றுவதற்கு பார்சி சமூகம் அளித்துள்ள பங்களிப்பும் எனக்கு நன்கு தெரியும்.

அதேபோல, டாடா குழுமம் எந்தளவுக்கு அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதையும் நான் அறிவேன்.

.GST: "கேரளா, ஆந்திரா, கர்நாடகா இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி; தமிழகம் 3% மட்டுமே!" – தங்கம் தென்னரசு.

இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக முக்கியமான அங்கமாகும். எனவே, அவர்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி இதைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் விரைவாக ஒரு இயல்புநிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய அவர்கள் பேசித் தீர்க்க வேண்டும். இதுபோன்று பகிரங்கமாகப் பொதுவெளியில் வரக்கூடாது.

அந்தத் தலைமைத்துவத்தின் முதிர்ச்சிக்கு ஏற்ப, இந்தச் சூழல் விரைவில் சுமுகமாக முடிய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதுவே எங்களது நிலைப்பாடு."

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →